ஐ.தே.க.வை இளைஞர்களிடம் கையளிக்கத் தயார்!: ரணில்

478
ஐக்கிய தேசியக் கட்சியை இளைஞர்களிடம் கையளிக்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இளைஞர்களிடம் கையளிக்கப்படுவதற்கான காலம் கனிந்துள்ளது. கட்சியில் இளைஞர்களை முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலத்துக்கான வளமான சொத்துக்கள். அரசியலிலும் அவர்களின் பங்களிப்பு உரிய முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

அந்த வகையில் இனிவரும் காலங்களில் கட்சிக்குள் இளைஞர்களை உள்வாங்கி, அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE