குறைந்த விலையில் வருகிறது புதிய நோக்கியா போன்

232

நோக்கியா நிறுவனத்தை கொள்வனவு செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பல்வேறு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.

முன்னர் நோக்கியா என்ற பெயரில் கைப்பேசிகளை அறிமுகம் செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்னர் தனது சொந்தப் பெயரிலேயே கைப்பேசிகளை அறிமுகம் செய்தது.

ஆனால் மீண்டும் தற்போது நோக்கியா என்ற நாமத்துடன் புத்தம் புதிய கைப்பேசியான Nokia 216 இனை அறிமுகம் செய்யவுள்ளது.

இரட்டை சிம் வசதி கொண்ட இக் கைப்பேசியில் 2.4 அங்குல அளவுடைய QVGA தொழில்நுட்பம் கொண்ட திரை காணப்படுகின்றது.

இவற்றுடன் 0.3 மெகாபிக்சல்களை உடைய கமெரா உட்பட புகைப்படங்களை பார்வையிடல், வீடியோக்களை பார்வையிடல் உட்பட ஹேம்கள் விளையாடும் வசதியும் இக் கைப்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதமளவில் சந்தைக்கு வரவுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது இந்தியாவில் 37 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE