டுவிட்டரில் புத்தம் புதிய அம்சங்கள்

267

625-500-560-350-160-300-053-800-748-160-70

சமூக நெட்வொர்க்கில் ஒன்றான டுவிட்டர் என்பது மைக்ரோபிளாக்கிங் பிரிவில் முன்னணியில் இருக்கும் சமூகக் கூட்டிணைப்பு வலைத்தளம் ஆகும்.

டுவீட் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் தங்களுக்கிடையே அனுப்பும் மற்றும் பெறும் வசதி இதில் உண்டு.

செய்திகளை அதிகபட்சமாக 140 கேரக்டர்களுக்குள் மிகச் சுருக்கமாக உள்ளடக்குவதாக திகழ்கிறது.

மேலும் டுவிட்டர் நெட்வொர்க்கானது தனது சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் டுவிட்டர் வடிவமைப்பின் சில புதிய சிறப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டரின் புதிய அப்டேட்டுகள் மூலம், அதனுடைய பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டுவிட்டரின் சிறப்பு அம்சங்கள்
  • ஒரு ட்வீட்டருக்கான பதிலில் ரிப்ளை பன்னும் போது @**** என்று டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். மேலும் அந்த குறுஞ்செய்தியானது 140 கேரக்டரில் இனிமேல் கணக்கெடுத்துக் கொள்ளாது.
  • நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் புகைப்படங்கள், ஜிஃப், வீடியோக்கள் மற்றும் கருத்துக்கணிப்பு போன்றவை 140க்குள் வராது.
  • பயனர்களின் சொந்த ட்வீட்டுகளில் ரீட்வீட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் அதிக கவனம் பெறாத அல்லது சூழலுக்கு தகுந்த பழைய ட்வீட்டுகளை மீண்டும் ட்வீட் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
SHARE