வினைத்திறன் மிக்க உடல் பயிற்சிக்கு உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு

265

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

கடும் உடற்பயிற்சிகளின் ஊடாக திடகாத்திரமான உடல் அமைப்பை பெற எண்ணுபவர்களுக்கு பல சமயங்களில் எதிர் விளைவுகள் ஏற்படுவதுண்டு.

இதற்கு போதியளவு சக்தி இன்றி கடும் உடற் பயிற்சியில் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமைகின்றது.

இவ்வாறானவர்களுக்கு உதவும் பொருட்டு நவீன மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த மாத்திரையானது உடற் பயிற்சியின் விளைவாக ஏற்படும் இருதய நோய்களை தடுப்பதுடன், இருதயத்தை வலுவடையவும் செய்கின்றது.

மேலும் உடலில் காணப்படும் மேலதிக கொழுப்பினை விரைவாக கரைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் இம் மாத்திரை உதவி புரிகின்றது.

முதற்கட்டமாக எலிகளில் குறித்த மாத்திரை பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் குறித்த மாத்திரை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக குறித்த ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

SHARE