எபோலா நோய்க்கு 4 நாடுகளில் 932 பேர் பலி: உலக சுகாதார வல்லுநர்கள் தீவிர ஆலோசனை

468
புதிய வைரஸ் நோயான ‘எபோலா’ ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ‘எபோலா’ தொற்று நோய் என்பதால் இந்நோய் தாக்கியவர்களை மற்றவர்கள் நெருங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய ‘எபோலா’ லைபீரியா, சியரா லியோனிலும் பரவியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் ஒரு டாக்டருக்கு எபோலா நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. இங்கு ஒரு டாக்டர் உள்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவில் வேகமாக ‘எபோலா’ பரவி வருவதாகல் சுதாகார மையம் கவலை அடைந்துள்ளது. நோயை கட்டுப்படுத்த உலக வங்கி ஆப்பரிக்க நாடுகளுக்கு 1200 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது. இந்நிலையில் 4 நாடுகளில் இந்நோய்க்கு இதுவரை 932 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர சவுதி அரேபியாவில் ஒருவர் ‘எபோலா’ நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக சந்தேகத்துக்குரிய செய்தி வந்துள்ளது. இது உறுதியானால் ஆப்பிரிக்காவுக்கு வெளியில் ‘எபோலா’ தொடர்பான முதல் பலியாக பதிவு செய்யப்படும்.

இதற்கிடையே எபோலோ நோயை கட்டுப்படுத்துவது குறித்து உலக சுகாதார அமைப்பில் உள்ள வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை 2 நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

SHARE