பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல்: 6 தீவிரவாதிகள் பலி

462
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.அந்த வகையில், அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தட்டாகெல் பகுதியில் ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணையை ஒரு வீட்டின் மீது வீசியது. இதில் 6 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த தீவிரவாதிகள் அடையாளம் காணப்படவில்லை.

ஆனால், அவர்கள் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 15-ம்திகதி பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ஆரம்பித்த பிறகு அமெரிக்கா 4-வது முறையாக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE