வெப்கமெராவை சிசிடிவியாக மாற்றுவது எப்படி?

257

நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றே சிசிடிவி கமெரா.

இதன்மூலம் என்ன நடந்தது என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நமது வீ்ட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்க்க முடியும்.

இந்நிலையில் வீட்டில் இருக்கும் கணனி வெப்கமெராவை சிசிடிவி கமெராவாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.

யாகேம் (Yawcam) எனும் செயலியை பயன்படுத்தி கணனியுடன் இணைக்கப்பட்ட எவ்வித கமெராவையும் நேரலை வீடியோக்களை பார்க்க முடியும்.

முதலில் குறித்த செயலியை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவ வேண்டும்.பின்னர் செட்டிங்ஸ்-யை ஓபன் செய்து, நீங்கள் பயன்படுத்த இருக்கும் கமெராவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

Integrated Camera ஆப்ஷன் தெரிவாகி இருந்தால் உங்களது கமெராவை தெரிவு செய்து கொள்ளலாம். இதன்பின்னர் Preview Window-வை பார்க்கலாம்.

SHARE