கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத இந்த காதல் ஜோடிகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் பெரும் பரபரப்புடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Bakersfield என்ற பகுதியை சேர்ந்த Don மற்றும் Maxine Simpson என்ற தம்பதிகள் கடந்த 1948ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்த நாளில் இருந்து கருத்துவேறுபாடு இன்று ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலிபோர்னியா மருத்துவமனையில் பக்கத்து பக்கத்து படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை Don என்பவரின் உயிர் முதலில் பிரிந்தது. கணவரின் உயிர் பிரிந்தது தெரியாமல் Maxine Simpson அவருடைய கையை பிடித்துக்கொண்டே தூங்கியுள்ளார். சரியாக நான்கு மணிநேரம் கழித்து Maxine Simpson அவர்களும் உயிரும் பிரிந்துவிட்டது.
திருமணம் ஆனது முதல் கணவரை பிரியாத Maxine Simpson, கணவர் இறந்தபின்னர் அவருடனே இறந்தது அவருடைய உயிருக்குயிரான காதலை வெளிப்படுத்துவதாக அவருடைய பேரன் Melissa Sloan, அவர்கள் தெரிவித்தார். இருவருமே புன்னகையுடன் படுக்கையில் இறந்துகிடந்த புகைப்படம் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.