காலவரதேய சட்டம் தொடர்பிலான நாடாளுன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன.
. இது பாரதூரமான ஓர் பிரச்சினையாகும்.
காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுவதனை அரசாங்கம் எவ்வாறு நியாயப்படுத்தப் போகின்றது.
இந்து மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் புதிதாக பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின்றன.
நான் கௌதம புத்தரை மதிக்கின்றேன். என்னை பிழையாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒரு பௌத்தரேனும் இல்லாத ஊரில் விஹாரைகளை அமைப்பதன் பயன் என்ன? யாருடைய தேவைக்கு அமைய இவ்வாறு விஹாரைகள் அமைக்கப்படுகின்றன.
இந்து ஆலயங்கள் பராமரிக்கப்படுவதில்லை.
வடக்கு கிழக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
இது நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியதல்ல
வடக்கு கிழக்கு சனத்தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவது இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு முரணானது.
வடக்கு கிழக்கை தமிழர் தாயக பூமியாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் செயலாகும்.
காலவரோதய சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் நலன்களுக்காக ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கு முப்பது மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறு தமிழர்கள் நடத்தப்படுகின்றனர்?. ஏன் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்படுகின்றனர்?.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் குறைந்தளவு நிதி ஒதுக்கீடு செய்வது நியாயமாகுமா?
உங்கள் மனச்சாட்சியிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.