விந்தணுக்களை தானம் பெற வந்துவிட்டது மொபைல் ஆப்

767

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

இப்போ எல்லாம் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிவிடலாம்.

அந்தவகையில் லண்டனில் Order a Daddy என்ற புதிய ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது, இது எதற்காக தெரியுமா? விந்தணுக்களை வாங்குவதற்காக.

லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும் கமால் அஹீஜா என்பவர் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளார்.

இதில் விந்தணு தானம் செய்த நபர்களின் தகவல்கள் இடம்பெற்றிருக்கும், அவரது கல்வித்தகுதி, வேலை, தனிப்பட்ட குணங்கள், உயரம், நிறம் என அனைத்தும் இருக்கும்.

இதனை பயன்படுத்தி பெண்கள் தாங்கள் விரும்பும் குணாதிசயங்கள் உடைய ஆண்களின் விந்தணுக்களை தெரிவு செய்து கொள்ளலாம்.

தெரிவு செய்தவுடன் குறித்த பெண் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கருத்தரிப்பு மையத்துக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.

இன்னும் எதற்கெல்லாம் ஆப் வரப் போகிறதோ?

SHARE