நிலவு எப்படி தோன்றியது? ருசிகர தகவல்

238

பிரபஞ்சத்தில் நிலவு தோன்றியது குறித்து வானியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பூமி தோன்றியதிலிருந்து சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கிரகம் பூமியின் மீது பயங்கரமாக மோதியதிலிருந்து சிதறிய பொருட்களிலிருந்து தான் நிலவு தோன்றியது என விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் நிலையில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதாவது, அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவிலிருந்து எடுத்து வந்த பாறை படிமங்களை ஆய்வு செய்த போது பூமியில் இருந்த இரும்பு, பிராணவாயு போன்ற கலவைகள், நிலவின் பாறைகளிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்த கோட்பாடு ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் என நம்புகின்றனர்.

எனினும் உறுதியாக ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE