விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா

450

விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து,
இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களை திரட்டும் பணியில் சுவர்ணராஜா ஈடுபட்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது

. சுவர்ணராஜாவை கைது செய்த மலேசிய அரசாங்கம்,
இலங்கையிடம் ஒப்படைக்க இணங்கியிருந்தது. எனினும், அரசியல் புகலிடம் வழங்கிய ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா, மலேசியாவிற்கு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சுவர்ணராஜாவை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE