மறைக்கபட்டதா? அல்லது மறையபட்டதா?

247

உலகவரலாற்றில் எதுவுமே உண்மையில்லை அதே போல் பொய் எனகருதும் எந்த நிகழ்வும் எப்போதும் பொய்யாகவே இருந்ததில்லை காலபோக்கில் எதுவும் மாறகூடும்.

உலகில் உள்ள மலைகளில் மிகப் பெரிய மலை எதுவென்றால்? அதன் பதில் “எவரெஸ்ட் சிகரம்” (Mount Everest) தான். இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் சிந்திக்ககூடும் 8,848 மீட்டர் உயரத்தைக் கொண்ட இந்த மலை உண்மையில் உலகின் உயரமான மலை அல்ல! ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு மலையின் உயரம் எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான்.

இருந்தும் கடல் மட்டத்திலிருந்து கணிப்பிட்டு பார்க்கும் போது “எவரெஸ்ட் சிகரம்” தான் மிகவும் பெரிதான மலை என்பதில் சந்தேகம் இல்லாவிடினும் கடலினுள் காணப்படும் மலைகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது “எவரெஸ்ட் சிகரம்” உயர்ந்த மலை அல்ல!“ஹவாய்” (Hawaii) தீவில் காணப்படும் “மவுனா கேயா” (Mauna Kea) எனப்படும் மலை தான் மிகவும் பெரியது என்பத நம்மில் எத்தனைபேருக்கு தெரியம்.

625-0-560-320-500-400-194-800-668-160-90-5

இதன் சிறிய பகுதி ஒன்று தான் கடல் மட்டத்திற்கு மேலாகத் தெரிகின்றது. சுமார் 4,207 மீட்டர் மட்டுமே நமது கண்களால் பார்க்க முடியுமாக உள்ளது. ஆனால், இந்த மலையின் அடி, கடலுக்குள் இருக்கும் காரணத்தால், அதனைக் கடல் அடியில் இருந்து அளந்து பார்க்கும் போது தான் அதன் முழுமையான உயரமே தெரிய வந்தது.

இந்த “மவுனா கேயாவின்” உயரம் 10,205 மீட்டர் ஆகும், அதாவது “மவுனா கேயா” எவரெஸ்ட் சிகரத்தை விட 1,357 மீட்டர் உயரமாக காணபடுகின்றது!

இதை தான் முன்னோர்கள் “கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய்”என கூறியிருப்பார்கள் போலும்…

SHARE