தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன் அல்லது கள்ள மொபைல்களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது. உதாரணமாக, ஒரு க்ளோன் மொபைலின் தொடுதிரையில் தரம் குறையும், ப்ராசஸர் மெதுவாக இயங்கும் அல்லது அல்லது பேட்டரி அதிக நேரம் தாக்கு பிடிக்காது.
சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்று ஒரு புதிய வகை பல இ-காமர்ஸ் வலைத்தளங்களில்அறிமுகமானது. மறுசீரமைக்கப்பட்ட தொலைபேசிகள் என்பது செக்கென்ட ஹாண்ட் மொபைலாகவோ அல்லது பாக்ஸ் திறக்கப்பட்டு சேதம் கண்டறியப்பட்டு பழுத்துப்பார்க்கப்பட்ட மொபைலாகவோ இருக்கலாம்.
அசலா அல்லது க்ளோனா..?
இரண்டில் எதுவாக இருப்பினும் அந்த போன்கள் அசலா அல்லது க்ளோனா அல்லது மறு சீரமைக்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டுபோன.? ஐபோனா..? என்பதை கண்டறிவது மிகவும் கடினம். வழிமுறை : அவைகளை கண்டுபிடிப்பதற்கான எளிமையான வழிமுறைகளை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிற்கும் தனிதனியே கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு – அசலா..? போலியா..? ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் எளிதாக ஐஎம்இஐ (IMEI) எண் மூலம் உங்கள் கருவி அசலானதா அல்லது போலியானதா என்பதை தீர்மானிக்க முடியும்.
வழிமுறை #01 நீங்கள் உங்கள் ஐஎம்இஐ எண்ணை பெற *#06# என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம் அல்லது செட்டிங்ஸ்-> அபௌட் டிவைஸ் -> ஸ்டேட்டஸ் என்பதின் மூலமும் பெறலாம்
வழிமுறை #02 உங்கள் ஐஎம்இஐ எண்ணை நீங்கள் பெற்றதும், imei.info என்ற வலைத்தளத்திற்கு சென்று டயலாக் பாக்ஸில் அதை பதிவு செய்து சோதனை செய்து பார்த்து விடலாம்.
வழிமுறை #03 நீங்கள் கிடைக்கப்பெற்ற தகவலும் உங்கள் போனில் கிடைக்கப்பெறும் தகவலும் வெவேறாக இருப்பின் உங்கள் ஆண்ட்ராய்டு போலியானது என்று அர்த்தம்.
ஐபோன் – அசலா..? போலியா..? நீங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசி நிகழ்த்தும் அதே வழிமுறைகள் கொண்டே உங்கள் ஐபோன் அசலானதா..? அல்லது போலியானதா..? என்பதை கண்டறிய முடியும்.
வழிமுறை #01 உங்கள் கருவியின் சீரியல் நம்பரை கண்டறிய சிம் கார்டு ஸ்லாட் அல்லது செட்டிங்ஸ்-> ஜெனெரல் -> அபௌட் செல்வத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
வழிமுறை #02 உங்கள் சீரியல் நம்பரை பெற்றதும், checkcoverage.apple.com என்ற வலைத்தளத்திற்கு சென்று சோதனை செய்து பார்த்து விடலாம்.
வழிமுறை #03 அங்கு உங்கள் வரிசை எண் மற்றும் குறியீடு பதிவு செய்து சோதனை செய்யப்படும். போலியான ஐபோன் என்றால் ‘இன்வேலிட் சீரியல் நம்பர்’ என்ற தகவல் கிடைக்கும்.
மறுசீரமைக்கப்பட்ட மொபைலா என்பதை கண்டறிய.?
வழிமுறை #01 : ##786# என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.
வழிமுறை #02 : வியூ ஆப்ஷனை கிளிக் செய்யவும் தொடர்ந்து, வழிமுறை #03 : பின் அந்த ஆப்ஷன் உங்களை ரீ கண்டிஷன்ட் ஸ்டெப்’பிற்கு கொண்டுசெல்லும்.
வழிமுறை #04 : அங்கு ஆம் என்று இருந்தால் அந்த மொபைல் மாரு சீரமைக்கப்பட்டு கருவியாகும், இல்லையெனில் இல்லை என்று காட்டப்படும்.