தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம்: ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றார்

488

 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த சச்சின் தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பை-பாஸ் சர்ஜ்ரி செய்ய நேரிட்டது. இதனால் தான் ராஜ்யசபா கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாமல் போனதாக சச்சின் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ராஜ்யசபா கூட்டத்தொடரின் எஞ்சிய அமர்வுகளில் தன்னால் பங்கேற்க இயலாததால் தனக்கு விடுமுறை அளிக்கும்படி தெண்டுல்கர் கோரியிருந்தார். அவரது விடுமுறை கோரிக்கையை ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE