உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு

474
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி சாதனை படைத்தார் க்ளோஸ்.

1990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ஜெர்மன் தேசிய அணியில் இருந்தும் அவர் விலகினார்.

இதுபற்றி குளோஸ் கூறுகையில், “பிரேசில் நாட்டில் சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் எனது சிறுவயது கனவு நிறைவேறியுள்ளது. ஜெர்மனியின் தேசிய அணிக்காக விளையாடிய தருணங்களை மறக்க முடியாது. எனது சிறந்த கோலையும் அடித்துள்ளேன்” என்றார்.

SHARE