–
இஸ்ரேல் ராணுவத்துக்கும், காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா மீது இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளில் சில ஏவுகணைகள் வெடிக்காமல் அப்படியே நடுரோட்டில் கிடக்கின்றன.
தற்போது இரு தரப்பினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதால் வெடிக்காத குண்டுகளை காஸா போலீஸ் வல்லுனர்கள் செயலிழக்க வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படி வெடிக்காத ஒரு ஏவுகணை குண்டை வல்லுனர்கள் செயலிழக்க வைக்கும்போது திடீரென அந்த குண்டு வெடித்தது. இதில் 3 போலீஸ் வல்லுனர்கள், அசோசியேட்டட் பிரஸ் வீடியோகிராபர் உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும், அசோசியேட்டட் பிரஸ் போட்டோகிராபர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.