வந்துவிட்டது பேஸ்புக் ஆபிஸ்! சூப்பரான வசதி பாஸ்

246

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

சமூக வலைத்தளத்தில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் புத்தம் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுதான் Facebook Workplace, அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100 சதவிகிதம் வெளிப்படைத் தன்மையுடன் செய்து முடிக்கவும் இந்த பக்கம் உதவி புரிகிறது.

இதன்மூலம் அலுவலத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தங்களுக்குள் பணிகளை, முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி உயரதிகாரிகள் குறிப்பிட்ட நபருக்கு வேலையை வழங்கமுடியும்.

அலுவலக பணியாளர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கும் இந்த வசதியை, முதற்கட்டமாக மூன்று மாதம் இலவசமாக வழங்குகிறது.

இதனை ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்கள் மூலம் அலுவலகத்துக்கு வெளியிலிருந்தும் அலுவலகத்தோடு தொடர்பில் இருக்க முடியும்.

SHARE