ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா

454
தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 397 ரன்களும் சேர்த்தன. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக சிபான்டா 45 ரன்கள் எடுத்தார்.

தென்ஆப்பிரிக்க தரப்பில் டேன் பீட் 4 விக்கெட்டுகளும், ஸ்டெயின், மோர்னே மோர்கல் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். புதுமுக சுழற்பந்து வீச்சாளரான டேன் பீட் ஏற்கனவே முதலாவது இன்னிங்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை (மொத்தம் 8 விக்கெட்) சாய்த்த தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

பின்னர் 41 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 10.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடக்கிறது.

SHARE