1970க்கு போகிறார் வடிவேலு 

422




மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் வடிவேலு.கைப்புள்ள, வண்டு முருகன், நாய் சேகர் போன்ற பல்வேறு நகைச்சுவை வேடங்கள் ஏற்ற வடிவேலு 2 வருட இடைவெளிக்குபிறகு ‘தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து புதிய படத்தில் நடிப்பதுபற்றி ஸ்கிரிப்ட் கேட்டு வந்தார். காமெடி ஹீரோவாக நடித்தபோதும் தொடர்ந்து சக ஹீரோக்கள் படங்களில் நடிப்பேன் என்று கூறிவந்தார். இந்நிலையில் ‘எலி என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

‘தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் மீண்டும் இப்படத்தை இயக்குகிறார். வரும் செப்டம்பர் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. இதுபற்றி இயக்குனர் யுவராஜ் கூறும்போது, ‘அடுத்த படமும் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து செய்கிறேன். அடுத்த மாதம் ஷூட்டிங். 1970களில் மேற்கத்திய கலாசாரம் இந்தியாவில் பரவ தொடங்கியபோது நடக்கும் கதையை பின்னணியாக கொண்டு உருவாகிறது. ஜி.ராம்குமார் தயாரிப்பு. டி.இமான் இசை. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. தோட்டாதரணி கலை என்றார்.

SHARE