உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான சவூதி உயர்தூதர் அடல் பின் அஹமத் அல் ஜுபைர் தீவிரவாதத்தை ஒழிக்கும் ஐ.நா.வின் நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி அளித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் தீவிரவாதத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்றும் அவர் குறை கூறியுள்ளார்.
ஈராக்கில் ஜிஹாதிகளால் விரட்டப்பட்ட மக்களின் நிவாரண உதவிகளுக்கு ஏற்கனவே சவூதி அரேபிய அரசு 5 கோடி அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்துள்ளது நினைவிருக்கலாம்.