இராட்சத டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

220

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

உலகின் பல்வேறு பகுதிகளிலும் டைனோசர்களின் எச்சங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில் சற்றும் எதிர்பாராத வகையில் இராட்சத டைனோசர் ஒன்றின் எச்சங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதாவது பிரேஸிலின் டி ஜெனீரியோவில் உள்ள அருங்காட்சியத்தில் காணப்படும் இறாக்கையினுள் சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் உயிரினம் ஒன்றின் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த எச்சங்கள் தொடர்பில் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்ததன் விளைவாக அவை பிரேஸிலில் கண்டெடுக்கப்பட்டு மிகப்பெரிய டைனோசரின் எச்சங்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை Museum of Earth Sciences நிறுவனத்தை சேர்ந்த குழுவினரே உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ் எச்ஙகள் 1953ம் ஆண்டு Llewellyn Ivor Price என்பவரால் குறித்த அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Sao Paulo பகுதியில் உள்ள வீதி ஒன்றின் திருத்த வேலைகளின்போது இவ் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE