அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

472

அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை அமைச்சர்கள் இன்று சந்திக்கவுள்ளமை பிக்கு எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்படும் ஞானசார தேரர் தொடர்பில் புகார் அளிப்பதற்கேயாகும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

 அரசாங்இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரலெழுப்பினால் அவர்களை முறியடிப்போமென்று ஞானசார தேரர் சூளுரைத்துள்ளார். அவருக்கு இந்தளவு அதிகாரத்தை இந்தகம் வழங்கியுள்ளது.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

அமைச்சர் ராஜித சேனரத்னவிற்கு எதிராக இன்று பொதுபல சேனாவினால் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு உடையது.

ஏனெனில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பல இடதுசாரிகள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைக்கு எதிரான கருத்தை உடையவர்களாக உள்ளனர்.

அதே கருத்தையுடைய அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக அரசாங்கத்திற்குள்ளேயே செயற்படுகின்றனர். இதில் ராஜிதவும் உள்ளடங்குகின்றார்.

அதனால்தான் அவருக்கு எதிராக அரசாங்கம் ஞானசார தேரர் மூலம் அவதூறுகளை பரப்பி வருகின்றது.

மேலும், ஞானசார தேரர் நோர்வே நிதி உதவியுடனேயே தனது அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றார். என்பது தெட்டத்தெளிவாகி விட்டது.

அத்துடன் லங்கா ஏ நியூஸில் தனது காதலியுடன் டெனிம் அணிந்த நிலையில் ஞானசார தேரர் உள்ள படம் பிரசுரமாகியுள்ளது.

உண்மையில் பௌத்த துறவிகள் பெண்களுடன் தொடர்பற்று இருப்பர். ஆனால் ஞானசாருக்கு காதலி உள்ளார். வாகனம் ஓட்டுனர் மதுபானம் உட்பட அனைத்து தீயப்பழக்கங்களையும் கொண்டவராகவுள்ளார்.

இவர் தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தால் 99.9 வீதமான சிங்கள பௌத்தம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.  என்றார்.

 

SHARE