அனைத்தையும் அடக்கியாளும் சிவனே போதையில் திளைத்திருக்கின்றார். அதிலிருந்து மனிதன் மட்டும் எப்படி தப்பிவிடுவான்? சிலர் கஞ்சா ஒரு போதைபொருள் அது உடலக்கு ஆகவே ஆகாது என்பர். ஆனால் இன்னும் சிலர் கஞ்சா ஓர் அருமருந்து தனகத்தே பல நன்மைகளை கொண்டது என்கின்றனர்.
ஆனால் உண்மையில் கஞ்சாவுக்கு இவ்வாறான இரண்டு குணங்களுமே உள்ளது. “tetrahydrocannabinol” மற்றும் “Cannabidiol” என்கின்ற இரண்டு பதார்த்தங்களும் கஞ்சா செடியில் காணபடுகின்றது.
இதில் “tetrahydrocannabinol” என்ற பதார்த்தம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி போதையை ஏற்படுத்துகின்றது.
அதே நேரத்தில் “Cannabidiol”என்ற பதார்த்தம் மன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிராகவும், நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளை அளிக்கின்றது.
எளிமையாக கூற போனால் மின் விளக்குகள் இல்லாத சூழலில், நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தால் நமது பிரச்சனைகள் ஒருநிமிடம் மறக்கப்பெற்று மனம் இலேசாகிவிடும். இதனை நிலா வெளிச்சம் இல்லாமலும் நாம் உணரமுடியம் இருந்தும் நிலா வெளிச்சம் இதனை இன்னும் நன்றாகவே வெளிபடுத்தம் அது போல் தான் “Cannabidiol”.
குறிப்பிட்ட இருபாதார்த்தங்களும் அதிகமாகியும் குறையும் பட்ச்சத்தில் தான் போதை தோற்றம் பெறுகின்றது.அதிகமான நாடுகளில் சட்டதிற்குபுரம்பாக விற்க்கப்படும் கஞ்சாவில் “tetrahydrocannabinol” அளவு 15 வீதம் வரை காணபடுகின்றது.
அதன் மூலமே அதன் பாவனையாளர்களுக்கு கஞ்சாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் தாக்கம் ஏற்படுகின்றது.அதே நேரத்தில் “Cannabidiol” அறவே இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தில் கஞ்சாவின் தாக்கம் மிக மோசமாக அமைகின்றது.
குறிப்பாக, “tetrahydrocannabinol” அதிகமாகி காணப்படும் கஞ்சா சுருள்கள் நினைவாற்றலை கடுமையாகப் பாதிப்பதோடு அதனைப் பயன்படுத்துவோரில் 10 வீதமானோரை அதற்கு அடிமைபடுத்திவிடுகின்றது.
தற்போது கஞ்சாவிற்கு அடிமையானர்களை கஞ்சாகொண்டே சரிபடுத்த சில ஆய்வுகளும் நடைபெற்றுவருவதோடு“Cannabidiol”என்ற பதார்த்தை பயன்படுத்தவைப்பதன் மூலம் இதன் பாதிப்பை குறைக்கமுடியும் என்ற கோட்பாடிற்கு ஏற்ப தற்போதைய விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.