இன்றைய தொழிநுட்ப யுகத்தில் நவீன மருத்துவம் தொடர்பான கருவிகள் எக்ஸ்-ரே, ஸ்கேன் என பலவாரான புதுமைகள் அன்றாடம் வெளிவந்தவண்ணம் தான் உள்ளது.
அதே போல் மனிதர்களின் “சூப்பர் பவர்களும்”அவ்வப்போது கேட்போரை அதிர்ச்சிக்கு தான் தள்ளச்செய்கின்றது.
அவ்வாறான ஓர் பெண்தான் “நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா”ரஷ்யாவில் பிறந்த இவர் வெற்று கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை ஊடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவளாய் திகழ்ந்தாள்.
எளிமையாக கூறபோனால் “எக்ஸ்-ரே”கருவியை தனது கண்களில் பதித்திருகின்றார்.
இவர் முதலாவதாக தனது தாயின் உடல் உள்ளுறுப்புகளை ஊடுசக்தி மூலம் வெற்று கண்களால் பத்து வயதிலேயே பார்வையிட துவங்கிவிட்டார். அதன்பின் இவரது அதிதசக்தி உலகம் முழுதும் பரவ மிகவும் பிரபலமானார்.
மேலும் இவர் வைத்தியர் ஒருவரின் வயிற்றில் எந்த பகுதியில் ‘அல்சர்’ கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல எனவும் தீர்க்கமாக கூறி வைத்திய துறையின் மிகப்பெரிய நிபுணர்களையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது.