அப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளை Huawei நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
இந் நிறுவனம் தற்போது Honor 6X எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர Octa Core Kirin 655 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 4GB RAM உட்பட சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB என்பவற்றினைக் கொண்ட இரு பதிப்புக்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அத்துடன் அப்பிள் புதிதாக அறிமுகம் செய்த iPhone 7 போன்று 12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல்களை உடைய இரட்டை பிரதான கமெரா உட்பட 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், 4G LTE, WiFi மற்றும் Bluetooth, 3340 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.