ஐபோன் 7 பிளஸ்-க்கு சமமான அதை விட விலை குறைவான போன் ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் Honor 8 போன். அதில் இருக்கும் எல்லா வசதிகளும் கிட்டதட்ட இதிலும் இருப்பது தான் இதனின் சிறப்பம்சம் ஆகும்.
Honor 8 போனின் கமெரா சிறப்பு வாய்ந்தது. இதில் 12 12 மெகா பிக்சல் Dual கமெரா வசதியுள்ளது. இந்த மாதிரி வசதி பல ஸ்மார்ட் போன்களில் இல்லை, இதில் ஐபோனை விட துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியும்.
இந்த Honor 8 போனின் வடிவமைப்பானது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எல்லா வகையிலும் ஐபோனுக்கு ஈடு தருகிறது. ஆனால் பேட்டரி பேக் அப்பில் மட்டும் சிறிது குறைவு தான்.
கைரேகை (Finger Print) பட்டன் இதில் உள்ளது. இதில் நாம் கைரேகையை வைத்தால் 0.4 நொடியில் இது அன் லாக் ஆகும்.
இதில் நாம் ஷாட்கட்ஸை தேர்வு செய்யலாம். Single press, Double Tab, press & hold என இதில் மூன்று விதமான முறைகள் உள்ளது.
இந்த Honor 8 போனானது பார்ப்பதற்கு அப்படியே ஐபோன் போலவே இருக்கும். இதை பயன்படுத்தியவர்கள் இது பல விடயங்களில் ஐபோனை விட சிறந்தது என கூறுகின்றனர்.
இந்த போனின் திரையானது 5.2 அங்குலம் கொண்டதாகும். இது முழுக்க HD முறையையே காட்சிப்படுத்தும். இதில் 4 GB Ram மற்றும் 32 GB அளவுக்கு போனில் டேட்டாவை நாம் சேமிக்க முடியும்.
மொத்தத்தில் இந்த Honor 8ஆனது ஐபோன் 7 க்கு சவால் விடும் அளவில் அமைந்துள்ளது என தாராளமாக கூறலாம்.