Google Pixel பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

217

625-500-560-350-160-300-053-800-748-160-70

கூகுள் நிறுவனம் அண்மையில் Google Pixel மற்றும் Pixel XL எனும் இரு வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இக் கைப்பேசிகள் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 உட்பட சாம்சுங் நிறுவனத்தின் Galaxy On8 ஆகிய கைப்பேசிகளுக்கு போட்டியாக காணப்படுகின்றன.

இதற்கு காரணம் அப்பிள், சாம்சுங் நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கு நிகரான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றமையாகும்.

எனினும் தனது கைப்பேசி தொடர்பாக கூகுள் நிறுவம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையானது பயனர்களை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.

அதாவது இக் கைப்பேசிகளுக்கான அப்டேட்களை தற்போதிருந்து 2018ம் ஆண்டுவரையான இரண்டு வருட காலத்திற்கு எவ்வித பிரச்சினையும் இன்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் அதன் பின்னரான அப்டேட்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இக் கைப்பேசிகளின் மீதான ஆர்வம் பயனர்களுக்கு குறைவடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எனினும் இக் காலப் பகுதியில் தனது மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யும் பொருட்டே இவ்வாறானதொரு அறிக்கையை கூகுள் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

SHARE