சாம்சுங் நிறுவனத்தின் அதிரடி முயற்சி. தாக்குப் பிடிக்குமா ஏனைய நிறுவனங்கள்?

210

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

கணணிகள், ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என அனைத்து வகையான சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஏனைய நிறுவனங்களுக்கு போட்டியாக காணப்படும் நிறுவனமாக சாம்சுங் திகழ்கின்றது.

எனினும் முதல் இடத்தைப் பிடிப்பதற்காக தனது இலத்திரனியல் சாதன உற்பத்தியில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக மொபைல் சாதனங்களில் பிரதான நினைவகமாக 8GB RAM இனை இணைக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எனவே சாம்சுங் நிறுவனத்தின் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பனவற்றில் இவ் வகை பிரதான நினைவகம் பயன்படுத்தப்படவிருப்பதுடன், அவற்றின் செயற்பாட்டு வேகமும் அதிகமாகவே காணப்படும்.

மேலும் இந்த பிரதான நினைவகமானது LPDDR4 DRAM தொழில்நுட்பத்தினைக் கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPDDR4 DRAM என்பதன் விளக்கமானது Low Power, Double Data Rate 4 என்பதாகும்.

எவ்வாறெனினும் இந்த பிரதான நினைவகம் அடுத்த வருடம் முதலே சாம்சுங் நிறுவனத்தின மொபைல் சாதனங்களில் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE