இன்றைய சமூகவலைதளங்கள் எந்த அளவிற்கு நமக்கு நன்மைபயக்கும் விதத்தில் அமைந்திருகின்றதோ. அதே அளவிற்கு நமது தனிப்பட்ட செய்திகளையும் அது வைத்துகொள்ளும் என்பதில் எவ்வித மாற்றுகருத்து இல்லை.
இணைய யுகம் இன்று உலகத்தினை கிராமமயமாக்கிவிட்டது. அதாவது அந்நிய நாடுகளை தொலைதொடர்பு மூலமாக நாம் உற்று நோக்கினால் அது மிகதூரத்தில் இல்லை.
நாம் எமது நண்பருடன் இணையத்தில் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்களை பார்த்து எமக்கு தேவையில்லா சந்தர்பத்தில் அழித்தாலும் கூட நாம் பகிர்ந்துகொள்ள உபயோகப்படுத்திய அந்த மென்பொருள் நிறுவனத்தின் கணனிகள் அதன் பிரதி ஒன்றினை தன்னகத்தே வைத்துகொள்ளும், இந்த குறை மிகப்பெரிய பிரச்சனையாக காணப்பட்டது.
அண்மையில் முகநூலில் கூட இப்பிரச்சனை மிகப்பெரிய விடயமாக கருத்திற்கொள்ளப்பட்டது.
இதன்பின் இவ்வாறான குறைகளை நிவர்த்திசெய்யும் பொருட்டு சில தனித்துவமான மென்பொருள்வசதினை கொண்டு வடிவமைக்கப்பட்ட சமூகவலைதளங்களும் வெளிவந்தன.
“டயாஸ்போரா” (Diaspora)
இவர்கள் தமது நிறுவனத்தை ஆரம்பித்த கதையே சற்று சுவாரசியம் தான் நான்கு மென்பொருள் வல்லுனர்கள் ஒன்று சேர்ந்து “உங்களின் தனிப்பட்ட விபரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கி தருகின்றோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும்” என அறிவித்தனர்.
ஆனால் அவர்களின் கணிப்பையும் மீறி இரண்டே வாரங்களில் 6450 நபர்களின் மூலமாக $200,600 தொகை சேர்ந்தது.
தற்போது “டயாஸ்போரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறித்த மென்பொருள் அனைவருக்கும் தற்போது இலவசமாக கிடைக்கப் பெறுகின்றது.
“ஸ்நாப் சாட்” (Snap Chat)
இதன் செயற்பாடும் சற்று தனித்துவம் தான் எளிமையாக கூறினால் தீவிரவாதிகளின் மென்பொருள் போன்றது.
நீங்கள் உங்கள் கைபேசியின் ஊடாக ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டால் குறித்த நபர் படத்தை பார்த்து முடித்த சில வினாடிகளில் அது அழிந்து விடும்.
இது சமூகவலைதளங்களின் வரிசையில் மிகபெரிய வெற்றியை பெற்றதுடன் பல முண்ணனி நிறுவனங்கள் விலைபேசியும் இதன் விற்பனை உரிமையாளர்களால் மறுக்கப்பட்டது.
“கன்பைடு” (Confide)
புதிதாக வெளிவந்த இதன் சேவை குறுந்தகவல்களை பறிமாற்றிக்கொள்வதே. நாங்கள் அனுப்பும் செய்தி குறித்த நபரை சென்றடைந்தவுடன் அவர் படித்து முடித்தபின் அவரின் அனுமதியின்றியே அது அழிந்துவிடும்.
என்னதான் புதிது புதிதாக பல சேவைகள் வெளிவந்தாலும் அன்றோரு காலத்தில் கடிதம் மூலம் நமது செய்திகளை அனுப்பி அதற்கான பதில் கிடைக்கும் வரையில் காத்திருப்பது தனிசுகம் என்ன…