தேர்தலில் விருப்புத் தெரிவை நடத்தாமல் மஹிந்த பதவியை நீடித்து கொள்ள முடியும்:
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்ட வாக்கெடுப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இரண்டாவது விருப்புத் தெரிவு வாக்கு கணக்கெடுப்பை நடத்தாமலேயே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் தமது பதவியில் நீடிக்க முடியும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக முதல் கட்ட கணக்கெடுப்பின்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறாவிட்டால் இரண்டாவது கட்டமாக முதல் இரண்டு வேட்பாளர்கள் மத்தியில் விருப்புத் தெரிவு வாக்குகள் கணக்கிடப்படும்.
இதன்போது அதிக விருப்புத் தெரிவு வாக்குகளை பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எனினும் அதற்கு மஹிந்த ராஜபக்ச இடம் தரமாட்டார் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் குடும்ப ஆதிக்கம் என்பன அவர்களை வாக்காளர்கள் மத்தியில் இருந்து விலகிசெல்ல செய்துள்ளது.
கொழும்பை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான அலை அதிகரித்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.