உயிரிழந்தவர்களின் சடலங்களை விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு. ஏன் தெரியுமா?

191

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

நாம் வாழும் இப்பூமியில் மரணமடையும் சிலரது சடலங்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மற்றொரு கிரகத்தில் புதிய ஏலியன்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வது போல் மற்ற கிரகங்களிலும் ஏலியன்ஸ் எனப்படும் உயிரினங்கள் வசித்து வருவதாக பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது.

ஆனால், இதனை ஆதாரத்துடன் நமது ஆராய்ச்சியாளர்கள் இன்னும் நிரூபிக்கவில்லை.

ஏலியன்ஸ் இருக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் தேடுவதை விட நாமே புதிதாக ஏலியன்ஸ்களை உருவாக்க முடியும் என்ற முயற்சியை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

பூமி உருவான பிறகு கடலில் நுண்ணுயிரிகள் தோன்றின. இந்த நுண்ணுயிரிகள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களாக மாறியுள்ளன.

இதே போன்று நுண்ணுயிரிகளை மற்ற கிரகத்திற்கு அனுப்புவது தான் தற்போது ஆராய்ச்சியாளர்களின் தீவிரப்பணியாக உள்ளது.

இதனை செயல்படுத்த பூமியில் உயிரிழக்கும் ஒருவரின் சடலம் விண்வெளிக்கு அனுப்பப்படும்.

ஆதி காலத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சில திரவங்களை பூசி மம்மிகளாக இப்போது வரை பாதுகாத்து வருகிறோம்.

இதே வழிமுறையை பின்பற்றி, விண்வெளியில் உள்ள குளிர் மற்றும் வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் வகையில் சடலத்தின் மீது திரவங்கள் பூசப்பட்டு விண்வெளியில் மிதக்க விடப்படும்.

மேலும், விண்வெளி வீரர் உடுத்தும் ஆடையை சடலத்திற்கு அணிந்து அனுப்புவதால், அது தொலை தூரம் பயணிக்க முடியும்.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான கேரி கிங் பேசியபோது, ‘விண்வெளிக்கு அனுப்பப்படும் மனித சடலம் சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள மற்றொரு சூரிய குடும்பத்தை அடைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு சடலம் மற்றொரு சூரிய குடும்பத்தை அடைந்து அங்குள்ள ஏதாவது ஒரு கிரகத்தில் இறங்கி விடும்.

பின்னர், காலப்போக்கில் சடலத்தில் உள்ள மூலக்கூறுகள், நுண்ணுயிரிகள் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலில் பரவும்.

இவ்வாறு மற்றொரு கிரகத்தில் பரவும் நுண்ணுயிரிகள் எதிர்காலத்தில் மனிதர்களாகிய நாம் உருவாக்கிய ஏலியன்ஸ்களாக மாற வாய்ப்புள்ளது என கேரி கிங் தெரிவித்துள்ளார்.

SHARE