சாம்சங், சோனி, மோட்டோ, ஒன்ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் Android 7.0 Nougat வெர்ஷன் தற்போது சூப்பரான புதிய அப்டேட்களை விட்டுள்ளது.
Mobile Data Usage
பேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆப்ஸ்கள் பின்னால் செயலில் இருக்கும் போதோ, நோட்டிபிகேஷன்கள் வரும் போதோ பொதுவாக மொபைல் டேட்டா அதிகம் இழுக்கும். இப்போது இதன் புதிய அப்டேட்டில் இது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு டேட்டாகளை சேமிக்கும்.
Multi Tasking Window
இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு செயலிகளை நாம் ஓப்பன் செய்து செயல்படுத்த முடியும். எடுத்துகாட்டுக்கு, யூடியூபையும் டிவிட்டரையும் ஒரே நேரத்தில் நாம் காண முடியும்.
Improved Security
இதன் மூலம் நமது முக்கியமான விடயங்களை நாம் சேமித்து வைத்துள்ள செயலிகளை யாரும் திறந்து பார்க்காதவாறு கடுமையான பாஸ்வேர்டு, பின் போன்றவற்றை கொண்டு லாக் செய்ய முடியும். இண்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜின் பாதுகாப்பு அதிக அளவில் இருக்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Less Battery Usage And Faster Phone Performance
ஆண்ட்ராய்ட் 7.0 வில் போனில் பின்னனியில் தேவையில்லாத ஆப்கள் செயல்படுவதை இது தடுக்கிறது. மேலும் தேவையான செயலிகளை மட்டுமே இது செயல்படுத்தும். இதனால் போன் வேகமாக செயல்படுவதுடன், பேட்டரியும் மிச்சமாகும்.
Android TV
நாம் ஆண்ட்ராய்ட் டிவி மூலம் பார்க்கும் லைவ் டிவி நிகழ்ச்சிகளை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். பின்னர் நமக்கு தேவையான நேரத்தில் அதை பார்த்து கொள்ளும் படியான வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.