இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்பு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்
வெளிநாட்டு பாதுகாப்புப் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர். 2014ம் ஆண்டுக்கான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளே இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிடவுள்ளனர்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வையிடவுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.