மின்சக்தியை பிறப்பிக்கக்கூடிய கூரைத்தகடுகளை அறிமுகம் செய்யும் Tesla

201

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Tesla நிறுவனமானது கார் வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றாகும்.

இந் நிறுவனம் சோலார் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கூரைத்தகடுகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இதன் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வீடுகளில் பயன்படுத்தக்கூடியவாறு நான்கு வகையாக இக் கூரைத்தகடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் 14 kWh மின் சக்தியை சேமிக்கக்கூடிய இரு மின்கலங்களும் வழங்கப்படும் என Tesla நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இக் கூரைத் தகடுகளின் விலை தொடர்பான தகவல்கள் எதனையும் இதுவரை அந் நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் Tesla நிறுவனம் தானியங்கி கார்களையும் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE