அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு: சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்!

205

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது Apple Music எனும் சேவையையும் வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இச் சேவையின் ஊடாக ஒன்லைனில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

எனினும் இச் சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இதன்படி தனிநபர் பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்படுவதுடன், மாணவர்களுக்கு மாதாந்தம் 4.99 டொலர்களும் அறவிடப்படுகின்றது.

இந் நிலையில் தனி நபர் மற்றும் குடும்பத்தவருக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 9.99 டொலர்களுக்கு வழங்கப்படும் தனி நபர் சேவையினை 7.99 டொலர்களுக்கும், 14.99 டொலர்களுக்கு வழங்கப்படும் குடும்பத்தினருக்கான சேவையினை 12.99 டொலர்களுக்கும் வழங்கவுள்ளது.

கிறிஸ்துமஸ்து தினத்தினை முன்னிட்டே இந்த அதிரடி சலுகை வழங்கப்படுகின்றது.

எனினும் மாணவர்களுக்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE