தமிழர் சரித்திர வரலாறு !!!கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் வாழ்ந்தனர்

2961

 

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் – தெரிந்துகொள்வோம்

img_0166-300x167

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருகிறேன்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் :-

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று
சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

.5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமயான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races” என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது….

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

“Heinrich Kari Brugsh” – “History of Egypt” என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 – 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l”Inde)
LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ……..
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” – ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
==========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் “கொ ” வரும் இடத்தில் ” K ” ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
” பொத்தல் ” ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
– சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
– இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
” ழ ” உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் ” கட்டு மரம் ” தான் .
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” –

ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான்வள்ளலார் பிறந்த நாள் அக்டோபர் 5, 1823. அடிகளாரின்வான்புகழை கொண்டாடுவோம்!

இந்து மதமும் சைவ மதமும் தழைத்தோங்கி இருந்த காலக்கட்டத்தில், வள்ளலார் இந்த சமயங்களில் உள்ள புராணங்கள்,கட்டுக் கதைகள் முதலானவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம்என்று அறிவுறுத்தினார். ஆரியப் புராணங்களான இராமாயணம்மகாபாரதம் போன்றவற்றில் நேரத்தை வீணாக்க வேண்டாம்என்றும் வலியுறுத்தினார். கடவுள் என்பவர் ஒருவரே, பலர் அல்ல,அவர் ஒளியின் ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார்.ஒளியை கடவுளாக பாவித்து, உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாககொண்டு , அன்பும், தயவு சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலேஉலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும். அதுவே சமரசசன்மார்க்க உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார்.

சாதிகள், மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்றுஅறுதியிட்டு கூறினார். சிறுதெய்வ வழிபாடு, சிலைகள் வழிபாடுவேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தைஏற்படுத்திக் கொடுத்தார். ஆரிய இந்து மதம் மக்களிடம் புகுத்தி வந்தநடைமுறைகளை முற்றிலும் மறுக்கச் சொன்னார் வள்ளலார்.இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும், இறந்தவர்களுக்கு திதிதவசம் முதலிய ஈமக் கிரியையை செய்தல் வேண்டாம் என்றுஅறிவுறுத்தினார். சிறு தெய்வ வழிபாடு செய்தல் வேண்டாம் என்றுசொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிடவேண்டாம் என்றும் கூறினார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும்இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் , கடவுளை உண்மைஅன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் ,இயற்கை ஒளி வழிபாடே உண்மை வழிபாடு என்றும் போதித்தார்.இயற்கையின் சகல சக்திகளையும் நேரே வள்ளலார்உள்வாங்கியதால், நாத்திகம் பேசுபவர்களை கடுமையாககண்டித்தார் வள்ளலார். உண்மைக் கடவுளை, உண்மை அன்பால்வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள்பெறலாம் என்றும் , இயற்கை அருளின் துணைக் கொண்டு என்றும்அழியாத பேரின்ப வாழ்வில் மனிதர்கள் என்றும் வாழலாம் என்றுஉலகிற்கு வழிகாட்டினர் வள்ளலார்.

மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு நம்பிக்கையை,பண்பாட்டை , மொழியை திணிக்க முயலும் மதவாதிகளைகடுமையாக சாடுகிறார் வள்ளலார். சாதியும் மதமும் சமயமும்மனிதற்கு உண்மையை உணர்த்தாது துன்பத்தையே தரும் என்பதைதெளிவாக உணர்த்துகிறார வள்ளலார். இப்படி ஒரு தெளிவானஅன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார்தவிர உலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் ஒருமதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம்கட்டவிழ்த்து நாட்டை கலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனைசக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும்அவசியமாகிறது.

இவ்வாறுஅரும்பெரும்கருத்துக்களைஉலகிற்குவழங்கியவள்ளலாரைபோற்றுவதுஒவ்வொருதமிழரின்கடமையாகும். போற்றுவது மட்டுமல்லாது அவர் கூறிய வழியில் நாம்அனைவரும் நடக்க முயற்சிக்க வேண்டும். தமிழகத்திற்கு தமிழ்மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம் உலகில் உள்ளஎல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும்.குறிப்பாக இன வெறியை உமிழ்ந்து இந்தி, சமஸ்கிருத மொழியைஅனைவரின் மீதும் திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்குவள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டு செல்வோம்.இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலர இந்திய அரசு வள்ளலார்காட்டிய அன்பு வழியில் பயணிக்க வேண்டும். அப்போது தான்கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நல்லாட்சி மலரும்.அனைத்து மாநில மக்களும் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள்.பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கட்டும் ! வாழ்க வள்ளலாரின்வான்புகழ் !

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே !
– அருட்பெருஞ்சோதி அகவல்

பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார். சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

2200 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்து விளங்கிய தமிழர்கள். மீன் சின்னத்துடன் ‘பெருவழுதி’ என்று பெயர் பொறிக்கப்பட்ட சங்க கால மோதிரம் கண்டுபிடிப்பு ! தமிழர்களுக்கு அறிவு இல்லை, வரலாறு இல்லை, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் இழிவு படுத்தும் ஆரிய திராவிடர்களே, இந்த செய்தியை பாருங்கள் !

இந்திய கண்டத்திலேயே முதன் முதலில் எழுத்துக்களுடன் நாணயம் வெளியிட்டது தமிழர்கள் தான் என்று பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. இப்போது தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து வெள்ளியை இறக்குமதி செய்து அதில் மோதிரம் முதலான அணிகலன்களை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது . புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பாண்டிய மன்னன் பெருவழுதியின் மீன் சின்னத்தையும் , பெயரையும் தமிழி எழுத்துருவில் பொறித்து கிமு இரண்டாம் நூற்றாண்டில் மோதிரம் உருவாகியுள்ளனர் தமிழர்கள்.

இந்த மோதிரத்தை தமிழ் வணிகர் ஒருவர் வைத்திருந்தார். இவரிடம் இருந்து மலையாள தொல் பொருள் ஆய்வாளர் பீனா என்பவர் வாங்கி இதில் உள்ள செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளார். இவருக்கு நம் பாராட்டுகள். இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து தமிழக தொல்லியல் துறை இந்த அரிய கண்டுபிடிப்பை வாங்க வேண்டும். இப்படியான தமிழர் வரலாறு கூறும் தொல்லியல் பொருட்களை தமிழக அரசு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்து வரும் தமிழ் தலைமுறைக்கு காட்ட வேண்டும். அப்போது தான் தமிழின் தொன்மையும், தமிழர்களின் அறிவாற்றல் பற்றியும் இப்போதுள்ள தலைமுறை அறிந்து கொள்வார்கள்.

உலகில் முதல் கப்பல் படை

உலகில் முதல் கப்பல் படையை நிறுவி,தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த தமிழ் மன்னன் இராஜஇராஜசோழனும் அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.

இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகு பூம்புகார் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு, சிதைந்த அக்கப்பலின் அடிப்படையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்உருவாக்கிய மாதிரிவடிவம் திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

“தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்” என கடலோடி என்னும் நூலின் ஆசிரியர் நரசய்யா தெரிவிக்கிறார்.

உலகில் கப்பலை கண்டுபிடித்தவர்கள் மட்டுமன்றி கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவர்களும் தமிழர்களே என்று கூறப்படுகிறது. கப்பல் கட்டுமானத்தில் வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். காற்றின் திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியுள்ளார்கள்

இதே போல் தென்பசிபிக்மா கடலில், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது “தமிழ் மணி” என்ற பெரிலேயே நியூஸிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்து கப்பல் பொறித்த நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், “கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காக வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவுக்கு வரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகிய காலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டத்தின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மை தெரிந்தது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயற்கைக் கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.

உதாரணம்:

தமிழா————-மியான்மர்.
சபா சந்தகன்—–மலேசியா
ஊழன், சோழவன், வான்கரை, ஒட்டன்கரை,
ஊரு——–ஆஸ்திரேலியா
கடாலன்————ஸ்பெயின்
நான்மாடல் குமரி———-பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்——–மெக்ஸிகோ
திங்வெளிர்——————–ஐஸ்லாந்து
கோமுட்டி———————-ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்து அதன் மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்?

கப்பல், கடல் கலங்கள் வகைகள்

கட்டுமரம்
நாவாய்
தோணி
வத்தை
வள்ளம்
மிதவை
ஓடம்
தெப்பம்
டிங்கி
பட்டுவா
வங்கம்
அம்பி – பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி
திமில் – பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

லெப்டினன்ட் வாக்கர் எனும் ஆங்கிலேயர் கி.பி.1811ல் நமது கப்பல்களைக் கண்டு பின்வருமாறு வியந்து கூறினார்…… பிரிடிஷ்காரர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும்…… ஆனால் தமிழர்கள் கட்டிய கப்பலுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே சிறிதுசிறிதாக ஒதுங்கிய நம் கப்பற்கலைஆங்கிலேயர் வந்தபின் அவர்களின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது.

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள்

இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படை நிறைய குழுக்களை கொண்டிருந்தது.

அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”.

* இதில் “கனம்” என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு)
இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”.

* “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்கான குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, (“கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும்)
இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப் போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

* “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது.

* “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு)
இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்!

* “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது!

* “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி”
மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.

* “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது,
இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர், இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால்

* “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்றது.

இந்த கப்பல் படையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் இம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளதா என்பது சந்தேகம்தான்!


உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.
இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.

கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில் கூட இந்தியா அசல் தங்கத்தையே நாணயமாகப் பயன்படுத்தியிருக்கிறது. பாரத தேசத்து மன்னர்கள் தம் உடம்பில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களின் அளவு இன்று எந்த உலக கோடீஸ்வரனும் அணிவதில்லை.

தெய்வங்களின் திருமேனிகளிலும்,கோயில்களின் அஸ்திவாரங்களிலும்,நவரத்தினங்களும் தங்கமும் கொட்டிக்கிடந்தன. இந்திய மண்ணுக்கும் இந்து கலாச்சாரத்துக்கும் ஒவ்வாத மேலைநாட்டு மதங்களுக்கும் தெய்வங்களுக்கும் நாம் கொடுத்த இடம் தான்.நம் வைதீகத்தின் ஆணி வேரை அசைத்துப்பார்த்து,பாரதத்தின் ஆன்மீகத்தை பலவீனப்படுத்தி அதன் செழிப்பையும் குறைத்தது.அந்நியப் படையெடுப்பினால் அடுத்த நாட்டு மதங்கள் இங்கே உள்ளே நுழைந்ததை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் அந்நிய ஆதிக்கம் நீங்கிய பிறகும் அந்த மதங்களுக்கு நாம் இங்கே இடம் கொடுக்க வேண்டுமா?

அப்படி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இந்து மதத்தை விடச் சிறந்த கோட்பாடுகள் அவற்றில் ஏதாவது இருக்கின்றனவா? கீழ்க்கண்ட புள்ளி விவரங்களில் ஓர் ஒப்பு நோக்கல் செய்தால் அது உங்களுக்கே புரியும். உலகில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இறைவனைப் பற்றியோ ஆத்மாவைப் பற்றியோ தெளிவான விவரங்கள் இல்லை.ஆனால் நம் நாட்டு உபநிஷதங்களில் இறைவனுடைய வடிவம்,குணம்,மஹிமை முதலியவற்றைப்பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த முடிவுகள் சரியானவை என்று காலங்காலமாக யோகத்யானத்தில் அமர்ந்துள்ள முனிவர்களும் சித்தர்களும் வழி மொழிந்திருக்கிறார்கள்.

மனிதனுடைய ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் பிறர் தெரியாது என்பர்.ஆனால் இதயக்கமலத்தில் உள்ள ஜீவாத்மாவைப்பற்றியும்,மூலாதாரத்தில் உள்ள குண்டலினிப்பற்றியும் அதன் சக்தியை ஆறு ஆதாரங்கள் வழியாக எழுப்பும் வழியைப்பற்றியும் கூறும் நூல்கள் நம்நாட்டில் நூற்றுக்கணக்காக இருக்கின்றன. கஷ்ப்படுகிறவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த பாவத்துக்காக தண்டனை அனுபவிக்கிறார்கள் என்று அந்த மதங்கள் கூறுகின்றன. தாத்தா செய்த கொலைக்காக பேரனை எந்த அரசாங்கமாவது சிறையிலிடுமா?தகப்பன் செய்த திருட்டுக்காக மகன் கையை வெட்டும்படி எந்த சட்டமாவது சொல்லுமா?இந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை இந்த கேள்விகளுக்கு அழகாக பதில் சொல்லுகிறது.

நம்முடைய உலக வாழ்வு ஒரு நீண்ட பயணத்தின் ஒரு பகுதி தான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.முன்வினை பின்வினை முதலிய விளக்கங்கள் இந்து மதத்தில் இருப்பது போல் அறிவு பூர்வமாக வேறெங்கும் இல்லை. கலாச்சார ரீதியாக இந்து மதம் உயர்ந்த கோட்பாடுகளைச் சொல்லுகிறது.ஒரு தமையனை தகப்பனுக்குச் சமமாகவும்,தமயனின் மனைவியை தாய்க்குச் சமமாகவும் கூறி குடும்பத்தை கோயிலாக்கியது இந்து மதம்.

வணக்கம்.

ஆரியர்/திராவிடர்
எண்ணற்ற ஆரியகள் தமிழ் வளர்க்கபாடுபட்டிருக்கிறார்கள் .

ஆரியர்கள் ஓர் இனத்தவர்கள் அல்லர்; ஆரியம் என்பதுஒரு கூட்டமைப்பு
இந்து மதம் என்பது தமிழர் மதங்களாகியசைவத்தையும் வைணவத்தையும் குறிக்கிறது.

இந்துத்துவா என்றால் என்ன?

இந்துத்துவா என்பது ஒரு மதம் இல்லை. அது ஆரியவாழ்க்கை முறையாகும்.

ஆரிய வாழ்க்கை முறை என்பது என்ன?

  1. ஆரியர் பிறப்பால் உயர்ந்தவர்.
    2.
    ஆளுகை செய்வதற்கென்றே பிறந்தவர் ஆரியர்.உடம்பில் நோகாமல் மற்றவர்களை ஏமாற்றி அடிமையாக்கி வாழ்பவர்கள்.
    3. ஆரியர்களுக்குச் சேவை செய்வதையே தங்கள்பிறவிக் கடமையாகக் கொண்டவர் திராவிடர்.படிப்பறிவற்ற நிலந்தர அடிமைகள் என எண்ணப்பட்டவர்கள்.
    4. ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்கள் ஆரியரின்எதிரிகள் அல்லது தீண்டத்தகாதவர்கள்.


என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கைமுறைதான் ஆரிய வாழ்க்கை முறையாகும்.இதையே மனுநூல் வலியுறுத்துகிறது. மனுநூலின்இக்கொள்கைக்கு ஆங்கிலேயர் கொடுத்த பெயர்தான் இந்துயிசம் அல்லது இந்துத்துவா என்பதாகும்.

ஆரியர்கள் என்னும் சொல் யாரைக் குறிக்கும்?
இந்தியாவின் மீது படையெடுத்து வந்த
1. பாரசீகர் (கி.மு. ஆறாம் நூற்றாண்டு)
2. கிரேக்கர் (கி.மு. நான்காம் நூற்றாண்டு)
3. சகர் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு)
4. குசானர் (கி.பி. முதல் நூற்றாண்டு)
5. ஊணர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)
ஆகியோரும் வணிகத்திற்காக வந்த
6. உரோமர் (கி.பி. நான்காம் நூற்றாண்டு)

ஆகிய அறுவரும் ‘ஆரியர்’ என்னும் பொதுப்பெயரில்ஒன்றிணைந்தனர். இவர்கள் தங்களுக்கென்று ஒருமதம் இல்லாதவர்கள் ஆவர். ஆரியர் என்பது எந்த ஓர்இனத்தின் பெயரும் இல்லை. இவர்கள் கி.பி. ஏழாம்நூற்றாண்டில் வட இந்தியாவில் அபு மலையில்ஒன்றிணைந்து திராவிட அரசனாகியஅர்சவருத்தனைக் கொன்று திராவிட ஆட்சியைக்கைப்பற்றினர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின்பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.அவர்கள் கைப்பற்றிய பகுதி ‘ஆரியவருத்தம்’ அல்லதுஆரிய நாடு என்று குறிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்த காரணங்கள்யாவை?

  1. இவர்கள் அனைவரும் வெள்ளை நிறத்தவர்
    2. இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்
    3. தங்களால் படை எடுக்கப்பட்ட மக்களைத் தங்கள்கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டியகட்டாயம் உடையவர்கள்.
    இவ்வாறு இவர்கள் ‘ஆரியவருத்தம்’ என்பதைஉருவாக்கிய பிறகு, சட்டப் புத்தகமாகிய மனுநூலைஉருவாக்கினார்கள்.

இந்த மனுநூலுக்குக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்ஆதிசங்கரரால் போலி ஆன்மீக விளக்கம்கற்பிக்கப்பட்டு மனு தரும சாத்திரம் ஆக்கப்பட்டது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின்கருத்துகள் – வரலாற்றுச்சான்றுள்ளவை)

ஆரியர்களின் இரத்த வழித் தொடர்புள்ளவர்கள் தான்இலுமனாட்டிகள்.
இலுமனாட்டிகளின் குறியீடுகளை ஆராய்ந்தால் இந்தஉண்மை தெரிய வரும்.
அதாவது ஆரியர்களின் ஒருபகுதியினர் இந்தியாவைநோக்கி இடம் பெயர்ந்தனர். இன்னொரு பகுதியினர்பாபிலோனியா , துருக்கி , ரோமானியா , கிரேக்கம் ,இத்தாலி , ஜெர்மனி என்று ஐரோப்பா நோக்கிப்படர்ந்தனர். முசோலினி , ஹிட்லர் ஆகியோரும்ஆரியர்களே.

இன்று முழு உலகையும் , முழு உலகத்தலைவர்களையும் தங்களது கட்டுப்பாட்டில்வைத்திருக்க இயலும். எவ்வாறு இவ்வாறானசக்தியைப் பெற்றுக்கொண்டார்கள் என்று ஆராய்ந்தால்மிகவும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும் .

அவர்கள் ஒரு இரகசியத்தை அறிந்து வைத்துள்ளார்கள். அதை நான் எழுதினால் பலருக்கு நகைப்பாகவும் ,கிண்டலாகவும் இருக்கும் . ஏனெனில் நாம் அல்லதுஇந்த உலக மக்கள் அப்படி திட்டமிட்டு வளர்க்கப்பட்டுவருகிறார்கள். நம் அறிவுக்கண்கள் மற்றும் ஞானக்கண்கள் திட்டமிட்டு மூடவைக்கப்பட்டுள்ளன.உழைப்புமட்டுமே உயர்வைத் தரும் என்று நாமெல்லாம்வளக்கப்பட்டுள்ளோம் .

அது ஓரளவுக்குத்தான் நம்மைப் பொருத்தவரைஉண்மை. நமது உழைப்பெல்லாம் இந்த இரகசியத்தைஅறிந்த சிலருக்குத்தான் உயர்வைத்தரும்.

ஒன்றை மட்டும் சிந்தித்துப் பாருங்கள் . இந்த உலகில்சிலர்மட்டும் நம்மைவிட இலட்சம் மடங்குபணக்காரர்களாக இருக்கிறார்களே இவர்களெல்லாம்நம்மைவிட இலட்சம் மடங்கு அதிகமானஉழைப்பாளிகளாகவோ அல்லது இலட்சம் மடங்குபுத்திசாலிகளாகவோ இருக்கிறார்களா ? என்றால்இல்லை . வேண்டுமென்றால் சில மடங்குகள்அதிகமான புத்திசாலிகளாகவோஉழைப்பாளிகலாகவோ இருக்கலாம்.ஆக உழைப்பைமீறிய எதோ ஒன்றை இவர்கள் கற்று வைத்துள்ளார்கள்.
அது என்ன ?
அதுபற்றி ஆராய்ந்த மேதைகள் என்ன சொல்கிறார்கள்என்பது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
அதற்க்கு முன்னர் அறிவார்ந்த சமூகமாகிய நாம்சினிமாவைக் கொஞ்சம் தொலைவில்வைத்துவிட்டு , அறிவியலை கொஞ்சம் அருகில்வைத்துவிட்டு நமது முன்னோர்கள் , சித்தர்கள்,ஞானிகள் ,இந்துமதம் ,பௌத்தம் , கிறிஸ்தவம் ,இஸ்லாம் , இல்மனாடிகள் ஆகியோரைப்பற்றிப்/ஆகியவற்றைப் பற்றி கொஞ்சம் தேடித் தெரிந்துவைத்துக்கொண்டால் அதைப்புரிந்துகொள்வதற்க்கு இலகுவாக இருக்கும் என்றுநினைக்கிறேன்.

திராவிடர் 

தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம் என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர்.

சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
நன்றி -தமிழ்மணம் .

இராவணன்  


முன்னொரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஆண்ட மன்னன் இராவணன்.
அவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக இலங்கை நகர் இருந்தது.இராவணன் கற்றோர் போற்றும் கல்விமான்; எவராலும் வெல்ல முடியாத பேரு வீரன்; விலங்குகளும் மரம் செடி கொடிகளும் இன்புறப் பாடும் இசைவல்லான்; நாட்டியக் கலையில் நிகரற்ற கலைஞன்; செங்கோல் ஆட்சி செய்த மன்னன்; ஒரு குறையுமின்றி குடிகளைக் காத்த தமிழ் வேந்தன்.

இராவணனது கொடி வீணைக்கொடியாகும். அதனால்,இராவணன் ‘வீணைக்கொடியோன்’ எனப் போற்றபட்டான். அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கை கல்விகேள்விகளாலும், கலைகளாலும் ஓங்கி இருந்தது. நாட்டில் சிறந்திருந்த வளங்களால் செல்வம் நிறைந்திருந்தது.

மன்னனாய் இருந்தும் ஈசன் எனப் போற்றப்பட்டான் இராவணன்.

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரி கண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.

இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

– சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.

– ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்று வழங்கப்பட்டது.

அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து.


இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்

– சயம்பன்
– சயம்பனின் மருமகன் யாளிமுகன்
– ஏதி
– ஏதியின் மகன் வித்துகேசன்
– வித்துகேசனின் மகன் சுகேசன்
– சுகேசனின் மகன் மாலியவான்
– மாலியவான் தம்பி சுமாலி
– குபேரன்

இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.

ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.

இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.

குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை (தற்போதைய தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை )தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் .

சரி எப்படி இந்த கதையை நம்புவது ?
அதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை .
(இவற்றை நான் ஏற்றகனவே பதிவிட்டுள்ளேன்) இவை யாரால் உருவாக்கப்பட்டவை ?

தமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் .

இராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

அப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா ? அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும் , தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.
மகா சோழ சாம்ராஜ்யம் பர்மாவில் (மியன்மார் )

கிபி 1024 இல் இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனின் பேரன் சொக்கடே பெரும்படையுடன் (கப்பற்படை) தென் பர்மாவை (மியன்மாரை) வந்தடைந்தான் .
இன்றைய இரங்கூன் நகரை அழித்தொழித்து தென்பர்மாவைக் கைப்பற்றினான்.
அவனுக்குப்பின்னர் அவனது இளைய சகோதரன் அனுருத்த அல்லது அனவர்த்த எனப்படுபவனால் 1079 வரை பர்மா ஆளுகைக்கு உட்படதாகப் பதிவுகள் காணப்படுகின்றன .
ஆக அந்தக்கலப்பகுதிகளில் பர்மாவில் சைவ பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.
அதன்பின்னரும் தமிழர்கள் அல்லாத மன்னர்களாலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டன.

1870 களில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் புகையிரதப் பாதைகள் , சுரங்கங்கள் அமைத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டாலும் , உண்மையில் திட்டமிட்டு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு , முகவர்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களைப்பயன்படுத்தி ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.
அடிமைகள்போல் நடத்தப்பட்டு கடுமையான வேலை வாங்கப்பட்டு , ஒருவேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு இலட்சக்கணக்கில் தமிழர்கள் மரணிக்க நேர்ந்தது.
எஞ்சியோர் பர்மாவில் குடியேறினார்கள்.
மேலும் சில தமிழர்கள் வியாபாரம் செய்யவெனவும் , வேலை செய்யவெனவும் பர்மாவில் வந்து குடியேறினார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பர்மா இருந்தவரை தமிழர்களின் நிலை அபரீதமாக உயர்வடைந்து வந்தது. பர்மாவின் பொருளாதாரம் தமிழர்களின் கையில் வந்தது.
இந்த நிலை 1942 இல் ஜப்பான் உள்நுழையும் வரை நீடித்தது.
1942 இல் பிரித்தானியா பர்மாவை விட்டு பின்வாங்கியது.

ஜப்பான் படைகளின் பின்புலத்துடன் பர்மியர்களால் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஒருநாளைக்கு 500-800 தமிழர்கள் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அகதிகள் ஆகினர் . இந்தியாவுக்கு சுமார் மூன்று இலட்சம் அகதிகள் தப்பி வந்தார்கள். சுமார் மூன்று நான்குமாத நடைப்பயணத்தில் காட்டு வழிகளில், மலைகளில் , ஆறுகளில் இறந்து போனவர்கள் இதைவிட அதிகம்.

மீண்டும் ஒருசில ஆண்டுகளில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. நாட்டு மக்களின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கியது. இதனால் உண்மையிலேயே இழந்தவர்கள் தமிழர்கள் . அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஒரே இரவில் நாட்டுடமை ஆனது.

இன்று தமிழர்கள் சாதாரண விவசாயிகள் அல்லது கூலித் தொழிளார்கள்.
சுமார் பத்து இலட்சம் ஏழைத் தமிழர்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இவர்கள் கோயில்களில் தமிழ் வகுப்புக்களை நடத்தி தமிழ் வளர்க்க பாடுபடுகிறார்கள்.
1870 தொடக்கம் கட்டப்பட்ட கோயில்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.
வறுமை நிலையிலும் தமிழ் வளர்க்கப் படாதபாடு படுகிறார்கள் . அதுவே இவர்களின் சிறப்பு!

இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா என்று கூறப்படுகிறது.இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றியதாகவும் , களனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் நண்பர் யாழறிவன் அவர்களின் கட்டுரையில் படித்தேன் .

இராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்ததாகவும் , இந்தக்குன்றின் மேற் தளத்தில்தான் இராவணனின் புஸ்பகவிமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.இப்பாறையின் மேற்பரப்பில் நீர்த் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

உலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருப்பதாகவும் , இதன்மூலம் இங்கு வாழ்ந்தவர்கள் இறை சக்தியோடு தொடர்பு கொள்ளத்தக்க வகையில் இந்தக்கோட்டையை திட்டமிட்டு அமைத்திருக்க வேண்டுமென்றும் மேலை நாட்டு அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அல்லது இறைவனின் உதவியோடுதான் இவ்வாறான கோட்டை அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று அறிஞர்கள் கருதுகிறார்கள் .

5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரையப்பட்டவை.

இந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே.

தமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.

சிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய ” நெற்றிப் பொட்டுகளை “, சுரண்டி அழித்தது.

இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. 

அதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.இந்தக்கோட்டையைப் பற்றி நிறைய எழுதலாம்.

இன்று தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.

இராவணன் சீதையைக் கடத்தினாலும் ஒழுக்கம் உடையவன் எனும் கருத்து இன்று வரை உள்ளது குறிப்பிடத் தக்கது.

இப்படியான நிலையில் பலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..

பரராசசேகரன் உலா
வையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி
கைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்
வைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு –
மாதகல் மயில்வாகனப்புலவர்
பிரித்தானியர் கால நூல்கள்
History of Jaffna – 1884 – S.Kasishetty
Jaffna Today and Yesterday – 1907 – Duraiyappa Pillai
History of Jaffna – 1912 – Muththuthampy Pillai
யாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை
Ancient Jaffna – 1926 – Rajanagam
Critiques of Jaffna – 1928 – Njanappiragasar
Tha Jaffna Kingdom
The Ancient People of Sri Lanka are Tamils
யாழ்ப்பாண பூர்வீக வைபவம்
யாழ்ப்பாண குடியேற்றம்
புதிய நூல்கள்
இலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை
Tamils and Ceylon – நவரட்ணம்
Kingdom of Jaffna – 1978 – Pathmanathan
Early Settlements in Jaffna – Ragupathy
யாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்
பூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்

இவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதியிருந்தார் . நான் அதைப்படித்து அதற்கு மேலும் தேடிப்படித்து எழுதியுள்ளேன் . சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்க்காக எழுதவில்லை. இராவணன் பற்றிய எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிப்பவர்களுக்கு இது நிச்சயம் புரியும். நடுவிலிருந்து தொடங்கியவர்களுக்கு புரியாமலிருக்கலாம் .

அவரவர் கருத்துக்களைத் தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஒரு விசயத்தை நான் முன்வைக்கும்போது இயன்ற அளவுக்கு அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முயற்சி செய்கிறேன் . அதேபோல மறுப்பவர்கள் அததற்கான ஆதாரங்களை முன்வைத்தால் திருத்திக்கொள்ள இலகுவாக இருக்கும் . யாரோ சொன்னார்கள் என்பதுபோல சொல்லி ஒரு விஷயத்தை மறுத்து எழுதுவது ,கஷ்டப்பட்டு எழுதும் எங்கள் போன்றோரைக் காயப்படுத்துகிறது.மன்னன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?

ஆம் என்றோ இல்லை என்றோ அவசரப்பட்டு முடிவெடுக்காமல் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாமென்று நினைக்கின்றேன் .

இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததாகக் கூறுபவர்கள் யார் ?
அவனது ஆதரவாளர்களா ? என்று பார்த்தால் இல்லை அவனது எதிரிகளே
அப்படிக்கூறு கிரார்கள்.

உண்மையில் கதாநாயகனிடம்தானே விமானம் இருந்திருக்க வேண்டும் ? ஆனால் இங்கு வில்லனாக சித்தரிக்கப்படும் இராவணனிடம் விமானம் இருந்ததாக அவனது எதிரிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்களே ?
எங்கேயோ இடிக்கிறது அல்லவா ?

சரி பதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை ….

“இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.

சிங்களத்தில் பதிவு செய்யப்ட்டுள்ள கட்டுரைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து சில நண்பர்களுடன் உரையாடிய அடிப்படையில் நான் அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இருக்கும் “சிகிரியா” இராவணனின் காலத்தில் ராவணனின் “புஷ்பக விமானம்” இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருக்கிறேன்.
இராவணன் பாவித்த புஷ்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிகிரியா குன்றின் உச்சியில் இருந்து தரைக்கு குன்றின் நடுவில் சுரங்கம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். விமானம் வைத்திருந்த ராவணனால் சுரங்கம் அமைத்திருக்கமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

தவிர எகிப்தில் இருக்க கூடிய பிரமிட்டுக்களின் கட்டுமானத்திற்கும் “பபிலோனா பூந்தோட்டம்” அமைப்பதற்கான கட்டுமானத்திற்கும் இராவணனின் காலத்தில் விமானம் மூலமாக ஆட்கள் அனுப்பபட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

இது எகிப்து பிரமிட்டுகளில் காணப்படுவதாகவும் இதில் “லங்காபுர” என்று எழுதியிப்பதாகவும் சொல்கிறார்கள். ஆக எகிப்து பிரமிட்டு கட்டுமானங்களில் “ஈழத்தில்” இருந்து ஆட்கள் கொண்டு செல்லப்பட்டது அதுவும் விமானம் மூலம் கொண்டு செல்லபட்டார்கள் என்பது ஆய்வு.இதை ஒத்த விமானம் பிரித்தானியாவில் லண்டன் கொலண்டல் பகுதியில் உள்ள பழைய விமான காட்ச்சியகத்தில் காண முடியும்.Royal Air Force Museum London

முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன

இலக்கியங்களுடன் தொடர்புபடுத்தி இராவண் பற்றி சில தமிழ் ஆய்வுகள் இருப்பதனால் இன்று பல ஆதாரங்கள் தொலைக்கப்பட்டுள்ள நிலையில் நான் புதிதாக ஒன்றையும் எழுத முற்படவில்லை.

இருப்பதில் இருந்து ஆராய்வது அல்லது இருப்பதை வைத்துக் கொண்டு எமது அடுத்த தலைமுறைக்கு தகவல்களை கடத்துவது மிக முக்கியமானது என்று கருதுகிறேன்.

மேலும் தேடியபோது சில ஆச்ரயமான தகவல்கள் கிடைத்தன . அத்தகவல்களின்படி இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பயன்படுத்தியதற்க்கான அல்லது கண்டு அறிந்து வைதிருந்தமைக்கான சான்றுகளாக அவர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் , உருவாக்கியிருந்த சிலைகள் , கல்வெட்டுக்கள் , விமான மாதிரிகள் , விண்வெளி ஓடங்களின் ஓவியங்கள் , கல்வெட்டுக்கள் , விமான ஓடுபாதைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர்களே விமானத்தைப் பாவித்திருந்தால் இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?

அடுத்தடுத்தப் பதிவுகளில் தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் பயன்படுத்தியிருந்த விமானங்கள் பற்றிய தடயங்கள் குறித்து மேலும் விரிவாக ஆராய்வோம்.”மாவீரன் இராவணனிடம் புட்பக விமானம் இருந்ததா ?”

என்று ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம் .

கிட்டத் தட்ட இராவணன் வாழ்ந்த அதே காலப்பகுதிகளில் தென்னமெரிக்காவில் வாழ்ந்திருந்த ஒரு மக்கள் கூட்டத்தினர் (நாஸ்கா நாகரீகத்தினர் அல்லது நாஸ்கா மக்கள் ) விமானப் பாவனைகளோடு தொடர்பு பட்டிருந்தது அண்மையில் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் , அந்த தென் அமெரிக்க மக்கள் கூட்டத்தினர் விமானங்களைப் பாவித்திருந்தால் , நமது இராவணனும் விமானத்தைப் பாவித்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் எழுதியிருந்தேன் .

சரி தென் அமெரிக்க நாஸ்கா மக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் விமானங்களைப் பாவித்தனரா என்றும் , அதற்கான ஆதரங்களையும் சற்று ஆராய்வோம் .
(ஆய்வாளர் நிராஜ் டேவிட் அவர்களின் ஆக்கத்தைத் தழுவி பயணிக்கின்றேன் )

தென்னமெரிக்க நாடான இன்றைய பெரு நாட்டில் நாஸ்கா பாலைவனம் என்றொரு பாலைவனம் அமைந்துள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுப்பகுதியில் ,
சாதாரணத் தரைப்பகுதியில் இருந்து பலநூறு மயில்களுக்கு அப்பால் அதாவது இலகுவில் மனிதர்களால் சென்றடைய முடியாத பாலைவனத்தின் உள்ளே ஒரு பாறைகளால் ஆன மலைத்தொடர் காணப்படுகிறது .
இந்தப் பாறைகளால் ஆன நீண்ட மலையைச் சீர்செய்து அதாவது மட்டமாக வெட்டி 500 சதுர கி மீ பரப்பளவில் ஒரு இறங்குதளம் போன்ற சதுர வடிவிலான தளமொன்று அமைக்கப்பட்டுள்ளது . இத்தளத்தில் 23 கிமீ ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு தளத்தை இன்றைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக்கூட அமைப்பது என்பது மிகவும் சவாலானது என்று கூறப்படுகிறது.

இந்த சதுர வடிவ 500 கிமீ பரப்பளவுள்ள தளத்தில் பல மையில்கள் நீளமான கோடுகள் வரையப்பட்டுள்ளது . இக்கோடுகள் பறையைத் துளையிட்டு சிலிக்கன் துகள்களால் நிரப்பி வரையப்பட்டுள்ளது . எனவே இக்கோடுகள் வானிலிருந்து பார்க்கும்போதும் தெளிவாகத் தெரியக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. தவிர இக்கோடுகள் இன்றுவரை அப்படியே இருக்கிறது .

இங்கு கோடுகள் தவிர்த்து பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் தொடங்கிய புள்ளியிலேயே முடியும்.
இவை விமானிகளுக்கு வழிகாட்டும் குறியீடுகளாக (signals ) இருக்கலாம்.
இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம்.
கேத்திர கணித (Geometry) முறையிலான வடிவங்கள் விலங்குகள், பறவைகள் போன்ற உருவங்கள்.

இந்த நாசுகா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், வானம்பாடி பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பல இருக்கின்றன. இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள் கால் கிலோ மீட்டர் நீளத்துக்கும் நேர்கோடுகள் பல கிலோ மீட்டர் நீளத்துக்கும் வரையப்பட்டுள்ளன.

இந்தச் சித்திரங்களின் முழுமை எவருக்குமே தெரியாது.காரணம் இச்சித்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உதைப்பந்தாட்ட மைதானம் அளவுக்குப் பெரியவை . இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில் உயரப் பறந்தால் மட்டுமே முடியும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியம் இல்லை. இருந்தும் இந்தக் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. எரிக் வான் டேனிகன் இவற்றை வேற்று கிரக வாசிகளின் விமானத்தளம் என்று கூறியது அறிவியலாளர்களால் ஏற்கப்படவில்லை.

ஆக இந்தத் தளம் நாஸ்கா மக்களின் விமானம் இறங்குதலமாகவே இருக்க சாத்தியமுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் .அப்படியாயின் அவர்களிடம் விமானமும் இருந்திருக்க வேண்டுமல்லவா ?

அதுபற்றி அடுத்தப் பதிவில் ஆராய்வோம் .

இந்தப்பகுதியை ஆய்வு செய்ய பெரு அரசாங்கம் தடை விதித்து விட்டது. . இந்தப் பகுதியை தங்கள் நாட்டு மக்கள் புனிதப் பிரதேசமாகப் பார்ப்பதால் ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பேரு அரசு கூறினாலும், உண்மையில் மேலை நாட்டவர்கள் ஆய்வு என்று புகுந்து ஆய்வு செய்துவிட்டு , எவ்வளவு விசயங்களை வெளியிட வேண்டுமோ அவ்வளவை மட்டுமே வெளியிட்டு விட்டு , முக்கியமான இரகசியங்களை வெளியிடாமல் திருடிக்கொள்வது வழமை.

உதாரணமாக மாயன்களின் நாகரீகம் , சுமேரிய நாகரிகம் , எகிப்திய , பாபிலோனிய நாகரீகங்கள் , சிந்துவெளி நாகரீகம் , ஆரியர் நாகரிகம் , கிரேக்கர்களின் நாகரீகம் என்று எல்லா நாகரீகங்களையும் ஆராய்ந்து அங்கிருந்து திருடிய இரகசியங்களைக் கொண்டே இன்று இலுமனாட்டிகளால் உலகை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.

இவற்றையெல்லாம் பெரு அரசு நன்றாக அறிந்து வைத்துள்ளது.”இராவணன் வாழ்ந்த காலப் பகுதிகளில் உலகில் வாழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தினர் யாராவது விமானங்களை உபயோகப்படுத்தி இருந்தனரா? அல்லது அதற்கான ஆதாரமாக ஏற்க்ககூடிய தடயங்கள் ஏதாவது சிக்கியிருக்கிறதா ? ” என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் கிட்டத்தட்ட இராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் அதே காலப் பகுதிகளில் வாழ்ந்திருந்த மக்களால் உலோகங்களைக்கொண்டு செய்யப்பட்ட விமானத்தின் உருவத்தை ஒத்த உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

விமானம் மட்டுமின்றி விண்வெளி ஓடங்கள் கூட பாவனையில் இருந்தமைக்கான சந்தேகங்களை உண்டுபண்ணுமளவுக்கு ஆதாரங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஓவியங்களாக ,சிலைகளாக இன்றைய விவெளி வீர்கள் அணியும் விசேட ஆடைகள் போன்ற ஆடைகளுடன் வடிக்கப்பட்ட மனித உருவங்கள் , இன்றைய விவெளி ஓடங்களை ஒத்த விவெளி ஓடங்களின் கல்வெட்டுக்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வுருவங்களை உருவாக்கிய மனிதர்கள் எதற்க்காக அல்லது எதனைப்பார்த்து இந்த மாதிரி உருவங்களை உருவாக்கினார்கள் என்று விஞ்ஞானிகள் குழப்பதில் இருக்கிறார்கள்.

ஆக அன்றைய காலப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் விமானங்களையும் , விண் வெளி
ஒடங்களையும் உபயோகப் படுத்தியுள்ளனர். அல்லது அவற்றைக் கண்டுள்ளனர் என்ற முடிவுக்கு வரலாம் .

அப்படியாயின் ” இராவணனிடம் ஏன் புட்பகவிமானம் இருந்திருக்க முடியாது ?” என்ற கேள்வி எழுகிறதல்லவா ?”இராவணனின் ஆட்சி அந்தக்காலப்பகுதியில் உலகிலேயே தலை சிறந்த நல்லாட்சியாக இருந்தது.

இராவணனிடம் பறக்கும் இயந்திரம் இருந்தபடியால் குன்றுகள் , மலைகள் தோறும் பறந்து சென்று தியானம் , தவம் போன்றவற்றைச் செய்து மிகுதியான நேர்மறைச் சக்திகளைப் பெற்றுக்கொள்வார்.அந்த சக்தியால்தான் அவர் இறை சக்தியை நெருங்க முடிந்தது. அந்த நேர்மறைச் சக்தியால்தான் அதிக சக்தி வாய்ந்தவராக பத்து பேரின் புத்திக்கூர்மையையும் பலத்தையும் தனியொருவராக பெற்று விளங்கினார். தனது விமானத்தின் மூலம் தென் அமெரிக்கா வரை பறந்து அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மாயன்களோடும் நட்பு கொண்டவராக இருந்தார் . அதனால்தான் சிகிரியாவில் அமைந்துள்ள அவரது கோட்டை மாயன்களின் கட்டுமானத்தை ஒத்ததாக அமைந்திருக்கிறது.

இராவணன் இறக்கவில்லை மாறாக அவர் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் . தியானம் தவம் என்பவற்றினூடாக ஆயிரக்கணக்கான வருடங்கள் உறக்க நிலையில் இருக்கக்கூடிய சக்தியை இராவணன் பெற்றுள்ளார்.

இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் எரிபொருள் சக்தி தீர்ந்து போன பின்னர் இராவணன் பாவித்த ,அதாவது புவியீர்ப்பு விசைக்கு எதிரான சக்தியை உபயோகப்படுத்தி பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான இரகசியங்களை மேலை நாட்டவர்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.

இலங்கையில் இராவணின் பல்வேறு குகைகள் கணப்படுகிற்றன . அவற்றில் ஓன்று
ராவண எல்ல குகை . இந்தக்குகை மனிதர்களின் நடமற்றமில்லாத காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அக்குகையானது உற்பகுதியில் பல பிரிவுகளைக் கொண்டது. அதோடு பலமாடிகளைக் கொண்ட மாளிகையைப்போல அடுக்கடுக்காக அமைந்துள்ளது. இந்தக் குகையினுள் சீதை நீராடுவதற்க்காக என நீர்த் தடாகம் ஒன்றும் இருக்கிறது.

இராவணன் வானில் மற்றுமின்றி பூமிக்கு அடியிலும் பயணம் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்.”

அவர்கள் வரலாறுகளில் மற்றும் புராணங்களில் படித்தவற்றை ஆதாரமாகக் கொண்டு மேற்க்கண்டவாறு கூறுகிறார்கள்.

இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா என்று ஆராயவதற்க்காக இலங்கையின் NT தொலைகாட்சி ஒரு குழுவை ஒழுங்கு செய்து அனுப்பியது.இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, யாழ்ப்பாணத்தில் (இலங்கையின் வடபகுதி ) அமைந்துள்ள அடி முடியற்ற நிலவறை கிணற்றில் சுமார் நாற்பது மீற்றர்கள் ஆழம்வரையில் நன்நீரும் நாற்பது மீற்றர்கள் ஆழதிற்க்குக் கீழ் உவர்ப்பு நீரும் காணப்படுகிறதாம்.

10-20 மீற்றர்களுக்கு இடைப்பட்டப் பகுதியில் மண் கலந்ததெளிவில்லாத நீர் காணப்படுகிறதாம் . இதனால் சூரிய ஒளி உட்புக முடிவதில்லையாம் .

நிலவறை கிணறு என்று யாழ் மக்களால் அழைக்கப்படும் இந்தக் கிணறு போன்று இன்னொரு நிலவறைக்கிணறு யாழ்ப்பாணம்கீரிமலையில் காணப்படுகிறது. இந்த இரண்டு நிலவறைக் கிணறுகளுக்கும் இடையில் சுரங்கவழித் தொடர்பு காணப்படுவதாக முன்னோர்கள் கூறுகிறார்கள்.

சரி இந்தக் கிணறுகள் யாரால் எப்போது அமைக்கப்பட்டவை ?இதற்கு விடை காண்பது அவ்வளவு சிரமான ஒன்றல்ல.
ஏனெனில் கீரிமலையில் அமைந்துள்ள நிலவறைக் கிணற்றுக்கு மிகவும் அருகில்தான் கீரிமலை நகுலேஸ்வரம் சிவாலயம் (பிரதமர் மோடி அண்மையில் வழிபாடு செய்த ஆலயம் ) அமைந்துள்ளது.

இந்த சிவாலயம் இராவணனால் வழிபாடு செய்யப்பட்டதாக பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் யாரால் கட்டப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை. சிலவேளைகளில் இராவணனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆக இந்த நிலவறைக் கிணறுகளும் இராவணனால் அல்லது இராவணனின் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களான நாகர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.

மிகப்பாரிய தோற்றதையுடயதாக அமைந்திருந்த இந்தக் கோவிலும் 1620 களில் போர்த்துக் கேசியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டது. இன்று நாம் காணும் ஆலயமானது 1800 களுக்குபின்னர் நலன் விரும்பிகளால் அமைக்கப்பட்டது.இலங்கையில் இராவணன் காலத்து குகைகள் வடக்குமுதல் தெற்கு வரை பல இருப்பதாகவும் அவை ஒன்றோடு ஓன்று தொடர்புடையவை என்றும், அவற்றில் சில சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் முந்தைய பதிவொன்றில் பதிவிட்டிருந்தேன்.அதனால்தான் இராவணனை ஆகாயத்தில் மட்டுமின்றி பூமிக்கடியிலும் பயணம் செய்யக்கூடியவர் என்று பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.

பண்டாரவளையில் உள்ள மலைக்குன்றிலுள்ள குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது . இந்தக்குகையும் இராவணனுடன் தொடர்புடையதா என்று சந்தேகம் எழுகிறது.

பண்டாரவளை அம்பதண்டேகம பிரதேசத்தில் நிலத்துக்கு கீழ் 300 அடி ஆழத்தில் குகை ஒன்று காணப்படுவதாக கட்டிட ஆய்வு நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 15ம் திகதி 40 அடி பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்த போது இந்த விடயம் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்துக்கு கீழே உள்ள குகையின் சுண்ணாம்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் இந்த பள்ளம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியின் 500 மீற்றர் பிரதேசத்தை பொது மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்குள்ள 26 குடும்பங்களின் 90 பேர் வேறு இடமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடிபாட்டுக்கும், உமாஓய வேலைத்திட்டத்துக்கும் இடையில் சம்பந்தம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராவண மகாராஜாவுக்கும் அதே காலப் பகுதியில் தென் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த
நாகரீகத்தில் கொடிகட்டிப்பறந்த மாயன் இனத்தவர்களுக்கும் நெருக்கமான உறவுஇருந்ததாகவும் மாயன் இனத்துப் பெண்ணையே (மண்டோதரி ) இராவணன் திருமணம் செய்ததாகவும் பௌத்த பிக்குகள் கூறுகிறார்கள்.

மாயன் இனத்தவர்கள் அடிக்கடி இலங்காபுரிக்கு வந்து போவதாகவும் அவர்களும் பறக்கும் இயந்திரங்களைப் வைத்திருந்ததாகவும் சிங்கள பிக்குகள் கூறுகிறார்கள். சிகிரியாவிலுள்ள இராவணன் கோட்டையானது மாயன் இனத்தவர்களாலேயே
வடிவமைக்கப் பட்டதாகவும் கூறுகிறார்கள்.

மாயன் பண்டையத்தமிழர்கள். இது பற்றி சிலப்பதிகாரம் நூல்களில் கூறப்பட்டுள்ளது.முல்லைத்தீவு , குமுழமுனையில் உள்ள குருந்தனூர் மலை இராவணன் உடன் பிறந்த சகோதரர் ஆண்ட இடம் என்பது பல ஆக்கங்கள் கூறுகிறது , அந்த இடம் கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் காட்டில் உள்ளது , அங்கே முருகன் ஆலயம் உள்ளது .சிங்களவர்களின் பார்வையில் இராவணன் …….

சிங்களவர்கள் சொல்கிறார்கள்….. ” இராவணன் எங்களது மகாராஜா . வால்மீகி எங்களது மகா ராஜாவைப்பற்றி தவறாக சித்தரித்துவிட்டார். எங்கள் மகராஜாவின் கீர்த்திக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டார். இது எமக்கு கவலை தருகிறது. இராவணன் ஒரு மகான். அவர் மருத்துவம் , பொறியியல் போன்ற பல துறைகளில் வல்லமை பெற்றவர் .” என்கிறார்கள் .

விருதுகள் பல வென்ற ஆய்வாளர் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் உதயசிறி அவர்கள் ஒரு தொலைகாட்சி நேர்காணளில் ,
” இராவணனைப் பற்றி ஆராய்ந்தால் , கச்சதீவு முதல் முழு இலங்கையிலும் ஆட்சிபுரிந்தமைக்கான வாழ்ந்தமைக்கான சான்றுகள் அங்குலம் அங்குலமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிர அவர் பத்து தேசங்களை ஆட்சி செய்தமை தெரியவருகிறது .

அதில் இலங்கையைத் தவிர ஏனைய அனைத்து தேசங்களும் இந்து சமுத்திரத்தினுள்(இலங்கைக்குத் தேற்கே) மூழ்கிக் கிடக்கின்றன. இலங்கையில் இராவணனால் நிறுவப்பட்ட சிவாலயங்கள் ஆறு .
அவற்றில் ஓன்று (தென் திசையில் அமைக்கப்பட்டது )சமுத்திரத்தில் மூழ்கி இருக்கலாம் . சமுத்திரத்தில் இறங்கி ஆய்வுகள் செய்யும் வல்லமை எம்மிடம் இல்லை .
ஆனால் பதினைந்து வருடங்களாக நான் நிலத்தில் ஆய்வு செய்து பல நூல்களை வெளியிட்டுள்ளேன் .

(சிங்களத்தில் )
நக்லஸ் மலைத்தொடரில் இராவணன் பற்றிய ஆய்வு செய்யும் நோக்கில் தங்கியிருந்த சமயத்தில் (எட்டு வருடங்களுக்கு முன்பு ) ஒரு இரவுப் பொழுதில் இராவணன் தியானத்தில் இருக்கும் காட்சி என் கண்களில் பட்டது . ஒருசில வினாடிகள் நிலைகுலைந்து போன நான் அது பற்றி வெளியில் அறிவிக்கவில்லை.
தொடர்ச்சியான எனது தேடல்களால் அது எனது மன பிரமையாகக் கூட இருக்கலாம் . அல்லது உண்மையாகவும் இருக்கலாம் .

எனவே நான் பார்த்த அந்த இராவணனின் உருவத்தை ஓவியமாக வரைந்து வழிபாடு செய்கிறேன்.
இராவணன் சூரியனையும் சிவலிங்கத்தையும் வழிபாடு செய்திருந்தார் . அவர் கடுமையான தியானங்கள் , மந்திரங்கள் மூலமாக அதீத சக்தியைப் பெற்றுக்கொண்டார் . இராவணன் தியானம் செய்வதற்க்கான இடங்களாக மலை உச்சிகள் , நீர்வீழ்ச்சிகள் ,குகைகள் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது வழக்கம்”
இவ்வாறு கூறினார் .

இவர் கூறியதைக் காணுற்ற சிங்களமக்கள் மேகங்களோடு உரசிக்கொண்டிருக்கும் அந்த மலைத் தொடருக்குப் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் .

” எங்கள் மகாராஜா இராவணன் வாழும் மலைக்குச் சென்று ஆசி பெற்று வருவோம் ”

என்று ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சுமார் 4000 அடிகள் செங்குத்தான பாறைகள் கொண்ட அந்த மலை உச்சிகளுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்.
குறித்த மலையடிவாரத்தில் வாழும் மக்கள் இராவணத் திருவிழாவும் கொண்டாடுகிறார்கள் .

“இந்தக் காலத்திலும் இதையெல்லாம் நம்புகிறீர்களா ?” என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் அந்த மக்களை நோக்கிக் கேட்டார் .
அதற்கு….
” புத்தரை நம்புகிறோம் . இயேசுவை நம்புகிறோம் . நபிகள் நாயகத்தை நம்புகிறோம் . இன்னும் எத்தனையோ பேரை நம்புகிறோம் . போற்றுகிறோம் . வணங்குகிறோம் . அவர்கள் எல்லோரும் எங்கள் தேசத்தோடும் , மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தமே இல்லாதவர்கள் . ஆனாலும் நம்புகிறோமே ?
அதுபோல இராவணனையும் நம்பிவிட்டுப் போகிறோம் .
இராவணன் உண்மையிலேயே வாழ்ந்தாரோ இல்லையோ அவர் எங்கள் தேசதோடும் ,மண்ணோடும் , மொழியோடும் சம்பந்தப் பட்டவர். அதனால் அவர்தான் எங்கள் ஹீரோ” என்றார் ஒரு சிங்கள இளைஞர்.

அந்த பதில் என்னையும் கொஞ்சம் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தது.
ஆனாலும் ஒரு வருத்தம் . அவர்கள் இராவணனைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழமை போல உறக்கத்தில் இருக்கிறோம் . அல்லது பகுத்தறிவு பேசுகிறோம் .
வரலாறு திரிபுபடுகிறது .இலங்கையின் மூத்தக்குடி இராவணன் இனிமேல் சிங்களவன் ஆகிறான் .

 
அவர்கள் கூறுவது உண்மையா என்று தேடியபோது …….
தென் அமெரிக்க மாயன்களின் கட்டிடக் கலை கண்ணில் பட்டது .அதோடு இலங்கையில் காணப்படும் இராவணின் கோட்டையையும், அதன் சிதைவுகளையும், அந்த கட்டிடக்கலையையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

(தென் அமெரிக்காவிலும் சூரிய வழிபாடு , ஆண்குறி வழிபாடு , சந்திர வழிபாடுகளைக் காணமுடிகிறது. அத்தோடு பாறைகளுக்கும் , குன்றுகளுக்கும் , மலைகளுக்கும் அவர்களும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றிலிருந்து சுமார் 4500 -5000 ஆண்டுகளுக்கு முன்னர் இராவணன் இலங்காபுரியில் லிங்க வழிபாடு செய்திருந்தார் . அவரால் நடப்பட்டதாகக் கூறப்படும் லிங்கம் ஓன்று இன்றும் திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஸ்வரம் சிவாலயத்தில் காணப்படுகிறது. அதுபோல வட இந்தியாவில் வந்திறங்கிய இராவணன் அங்கும் சிவ லிங்கங்களை நட்டமைக்கான பதிவுகள் காணப்படுகின்றன. (படத்தில் பார்க்க )

இராவணன் வாழ்ந்திருந்த அதே காலப்பகுதிகளில் தென் அமெரிக்க நாடுகளில் வாழ்ந்திருந்த மக்கள் சூரிய ,சந்திர, இலிங்க வழிபாடுகளைக் கொண்டிருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

இன்றும் லிங்க வழிபாடு தென் அமெரிக்க நாடுகளிலும் மற்றும் ஜப்பான் , தாய்லார்ந்து உட்பட்ட அனைத்துக் கிழக்காசிய நாடுகளிலும் உள்ளது .
(வடநாட்டவர்கள் லிங்க வழிபாட்டை கொஞ்சம் அதிகப்படுத்தி கொச்சைப்படுத்தி ,கேவலப்படுத்திவிட்டார்கள் என்பது வேறு விடயம் )

சிவலிங்கம் என்பது ஆண் பெண் பிறப்புறுப்புக்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்பதால் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். மதங்களைக் கடந்து தத்துவார்த்தமாக சிந்தித்துப் பார்த்தால் ,
நம் முன்னோர்கள் உயிரை உருவாக்கும் வல்லமை கொண்ட ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்களை போற்றி மரியாதை செய்திருக்கிறார்கள். அந்த உயிர்கள் வாழ மூலமாக சூரியன் விளங்குவதால் சூரியனையும் போற்றி மரியாதை செய்திருக்கிறார்கள் .
நம் முன்னோர்கள் செய்த வழிபாடு என்பது முழுக்க முழுக்க இயற்கை வழிபாடு .இயற்கையின் சக்தியை வழிபட்டுள்ளனர்.
அவற்றையெல்லாம் இன்று நாம் தவறுதலாக இறை வழிபாடாக மாற்றிவிட்டோம் .
அதாவது இறைவன் இருக்கிறாரா இல்லையா என்கிற விஷயத்தை நான் தேடவில்லை . அதாவது இறைவன் என்று நாம் எதை அல்லது எந்த சக்தியைச் சொல்கிறோம் என்றுதான் தேடுகிறேன் .

உண்மையில் இந்த பிரபஞ்சம் ஒரு சக்தி மட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. சூரியன் எவ்வாறு சக்தியை வெளியிடுகிறதோ அவ்வாறே ஒவ்வொரு அணுக்களும் சக்தியை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது . அணுவைப்பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் அணுவின் சக்தி மட்டங்கள் பற்றியும் நாமெல்லாம் அறிந்துள்ளோம் .
மனித உடலும் கோடிக்கணக்கான அணுக்களால் ஆனது . ஆகவே மனித உடலும் சக்தியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியோடு எவ்வாறு மனித சக்தியை சரியாக இணைத்துக் கொள்வது என்பதை நாம் அறிந்து கொண்டால் நாமும் இறை சக்தியைப் பெற்றவர்களாகிவிடுவோம் .
நாம் நினைப்பதுபோல இறைவன் என்றொருவன் வேறாக இல்லை.
அந்த சூட்சுமத்தை அறிந்தவர்கள்தான் சித்தர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் (இராவணனும் அவர்களில் ஒருவர்).
அவர்கள்தான் பிரமிடுகளையும் இன்றைய மனிதர்களாலும் , அறிவியலாலும் உருவாக்கப்பட முடியாத பலவற்றையும் உருவாக்கினார்கள்.
இன்றைய அறிவியல் தோன்றுவதற்க்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்கள் , கோள்கள் , அவற்றின் சுழற்சி பற்றியெல்லாம் அறிந்திருந்தார்கள்.
எந்த திகதியில் அம்மாவசை வரும் , பௌர்ணமி வரும் என்றெல்லாம் அன்றே பஞ்சாங்கம் எழுதி வைத்திருந்தார்கள்.

பிரபஞ்ச சக்தியோடு நமது சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன ?
புரியும்படியாக சொல்வதென்றால் , நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வண்டியில் பயணம் செய்கிறோம் . அமர்ந்திருந்தாலும் சரி , இறங்கினாலும் சரி அது இயங்கிக்கொண்டிருக்கும் திசையிலேயே நாமும் இயங்கினால் நாம் அடைய நினைக்கும் பலனைப் பெறுவோம் .
மாறாக அதற்கு எதிரான திசையில் இயங்கினால் நாம் விரும்பத் தகாத பலனை அடைவோம் .அதுபோலத்தான் எமது ஆன்மாவால் பிறப்பிக்கப்படும் சக்தியை பிரபஞ்சத்தால் பிறப்பிக்கப்படும் சக்தியோடு இணைத்துக்கொண்டால் நாம் பலனடைவோம்.

அதை அறியாத காரணத்தால்தான் இன்று மனிதர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது.

உலகில் தோன்றிய எல்லா மதக் கோட்பாடுகளும் இந்த பிரபஞ்ச சக்தியை அடிப்படையாக வைத்ததும் , இந்த பிரபஞ்ச சக்தியோடு நம் சக்தியை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பதை நோக்காக வைத்துமே வழிமுறைகளை உருவாக்கியுள்ளன.
அந்த வழிமுறைகள் வெவ்வேறு மாதிரியாக அமைந்துள்ள போதும் எல்லாமே சரியானவை .

பின் தோன்றிய நாம் பிழை பிழையாக மொழிபெர்யர்த்து , வெவ்வேறு காரணங்களைக் கற்பித்து இன்றைய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டோம் .

இவற்றையெல்லாம் நம்மவர்கள் சொன்னபோது நான் நம்பியிருக்கவில்லை .
இன்று மேலை நாட்டவர்கள் புரியும்படியாகத் தெளிவாகச் சொல்கிறார்கள்.
நம்பாமல் இருக்க முடியவில்லை.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பெருமை கூறும் தஞ்சை பெருவுடையார் கோவில்!

தமிழை சிறப்பித்த மாமன்னன் இராசராசசோழன் !

“தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானமும்
தமிழ் பேரரசர் இராஜராஜ சோழனின் தமிழ்பற்றும் “…..

கோவில் கோபுர உயரம் 216 அடி…
தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் 216…

சிவலிங்க உயரம் 12 அடி…
தமிழில் உயிர் எழுத்துக்கள் 12..

சிவலிங்க பீடம் 18 அடி….
தமிழில் மெய் எழுத்துக்கள் 18……

சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி….
தமிழில் மொத்த எழுத்துக்கள் 247….

கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட அளவைகள் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. (wikipedia)

The temple was built using a measure of 1 3/8-inch called an angula (24 units equalling 33 inches called a hasta, muzam, or kishku). This is the same measure found in ancient Lothal and other sites in the Indus Valley dating back 4000 – 6000 years

https://en.wikipedia.org/wiki/Brihadeeswarar_Temple

இப்படி பல வழிகளில் நம் முன்னோர்கள் தமிழின் பெருமையை வளர்த்தார்கள் என்பது நமக்கு பெருமையே . இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழின் பெருமையை இக்கோவில் பறைசாற்றும்.

சரி எவ்வாறு எமது ஆன்மா வெளிபடுத்தும் சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைத்துக்கொண்டு சந்தோசமாக வாழ்வது ?

இது பற்றி மேலை நாட்டு அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் ?

மகிழ்நிலா ஈழ சாதனா

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.
தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர்.

தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?

..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும். 1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா?

அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் .

பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும். மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது. 1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார். ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். “எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்” எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான்.

இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை. இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது.


வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம். இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு. http://archaeologyindia.com/adichanallur.asp கார்பன்-14 வழியாக காலக்கணிப்பு வரும்வரை பொறுத்திருப்போம் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

இலங்கை-இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது ? 
சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள்.

சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது. கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள். இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. 

பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது. அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன.

விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார். பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,..

தமிழர்கள் பூர்வ குடி மக்கள்.என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார் வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிடத் தக்கது .

அருன்குமார் எழுதியது.

தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல. ஆனால் தமிழர் நாகரீகத்தை திட்டமிட்டே இதுவரை உள்ள அரசுகள் மறைத்து வருகின்றன. பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் – இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை. ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார்.

ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. (ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122) இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை. மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: ‘தமிழர் சமயம்’ – மார்ச் 2011 இதழில் வெளிவந்தது) [பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார். பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது.

அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை). மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது.

ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

இக்கட்டுரையை எழுதியவர்
மலையமான்

கடார அரசும் சிறீவிஜயப் பேரரசும் ஒன்று

சோழர் பரம்பரையைச் சேர்ந்த வீரராஜேந்திர சோழனின் நடுகற்கள் கடாரம் (தற்போதைய மலேசியாவின் கெடா) மீதான சோழர் கடற்படையின் படையெடுப்பினை பதிவு செய்துள்ளது. கடாரத்து இளவரசன் ஒருவன் தான் முடியைப் பெற்றுக் கொள்ள உதவி கேட்டு வீரராஜேந்திர சோழனை அணுகியதற்கு, உதவும் முகமாக கடற்பயணம் மேற்கொள்ளப்பட்டதென்று மூல ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. கடார அரசும் சிறீவிஜயப் பேரரசும் ஒன்று என நம்பப்படுகின்றது.
மலேசியாவில் புஜாங் வெள்ளி என்னுமிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் சோழர்களின் பொற்காலம் .

மகிழ்நிலா ஈழ சாதனா

3337 ஆண்டுகள் பழமையான சிவதலம்திருக்கோணேஸ்வரம்!


திருக்கோணேஸ்வரம் இலங்கையின் கிழக்குமாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில்உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில்உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள்இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததிருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம்பாடியுள்ளார்.

இது இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள்ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ளவழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையானஇவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனுமாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம்ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்றுசான்றுகள் கூறுகின்றன. இன்றிலிருந்து சுமார் 3337வருடங்கள் பழமையான இச் சிவதலம்
இலங்கை வேந்தன் இராவணனால் வழிபாடுசெய்யப்பட்ட தலமென ஐதீகம் உள்ளது.

கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத்தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சாகோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப்பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்குஅனுப்பி வைத்தான .கோயிலின் மூல விக்கிரகம் நகரஉலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார்போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன்சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும்அழித்தனர் .

அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக்கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில்சுமார் 500 பெளத்த இந்து ஆலயங்கள்போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

கோட்டை சுவரில் “முன்னே குளக்கோட்டன் …” எனும்கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம்(பாண்டியருடயது) பொறிக்கபெற்றிருப்பதும்இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.

இதன் அருகில் கடலில் 30 மீற்றர் ஆழத்தில் “ட “வடிவில் இன்னொரு ஆலயம் அண்மையில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இது எங்கள் இலங்கேஸ்வரன் இராவணன் வாழ்ந்தபூமி ”

தமிழரின் மறைந்த இசைக்கருவி!

தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி!

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி,துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே,தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது.

 

இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை மீட்டுருவாக்கம் செய்தல் அவசியமான ஒன்று. எனவே,யாழின் தோற்றம், வடிவம் – வகை அதன் பரிணாமம் அது அழிந்ததற்கான சமூகப் பின்புலம் முதலியவற்றை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.யாழின் தோற்றம்:வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரணம்.

இந்த வில்லே வில்யாழாக மலர்ந்தது. பதிற்றுப்பத்து, வில்யாழ் முல்லை நிலத்திலேயே முதலில் தோன்றியது என்று கூறினாலும், குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்பதே பொருத்தமுடையது. ஏனெனில் குறிஞ்சி நிலத்தில் தான் வேட்டைத் தொழில் மிகுதியாக நடைபெற்றது. இந்த வில்யாழ் மனிதனின் முயற்சியால், உழைப்பால் பல்வகை யாழாக மலர்ந்தது.

வடிவம் வகை:யாழின் வடிவத்தைத் துல்லியமாக அறியப் போதிய சிற்பங்களோ,ஓவியங்களோ இன்று நம்மிடம் இல்லை. சங்க இலக்கியங்களான புறநானூறு,கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை,சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ன. என்றாலும் யாழின் வகைகளைப் பேரியாழ், சீறியாழ்,மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறதே ஒழிய அதன் வடிவினை அறிய முடியவில்லை.

பெரும்பாணாற்றுப்படை (3-16 அடிகள்)’பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற உட்பக்கம், பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற துளை, இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை, நீர் வற்றிய சுனை உள் இருண்டிருப்பது போன்ற உட்பாகம், நாவில்லாத வாய்ப்பகுதி பிறைநிலவு போலப் பிளவுப்பட்ட பகுதி,வளைசோர்ந்த பெண்களின் முன்கையைப் போன்ற வார்க்கட்டு, நீலமணி போலும் நீண்ட தண்டு, பொன்னுருக்கிச் செய்தது போன்ற நரம்புகள் கொண்ட யாழ்’ என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

யாழின் வகைகள் என்று பார்க்கும் பொழுது வில்யாழ், பேரியாழ் (21 நரம்புகள்), சீறியாழ் (9 நரம்புகள்), என்பன சங்ககாலத்திலும்,மகரயாழ் (17 (அ) 19 நரம்புகள்), சகோடயாழ் (14(அ) 16 நரம்புகள்), செங்கோட்டு யாழ் (7நரம்புகள்) என்பன காப்பியக் காலங்களிலும் இருந்திருக்கின்றன. கல்லாடர் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) தமது நூலில் நாரதயாழ்,தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் (தேவயாழ்) முதலியவற்றைக் குறித்துள்ளார். சாத்தான் குளம் அ.இராகவன் தமது ‘இசையும் யாழும்’ என்னும் நூலின் யாழின் 24 வகைகளைக் குறித்துள்ளார்.

யாழின் பரிணாமம்:வில்லின் அடியாகத் தோன்றிய வில்யாழ் முதலில் குறிஞ்சி நிலத்தில் தோன்றியது என்றாலும் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்ற நான்கு நிலங்களுக்கும் உரியதாக அமைந்தது. யாழினை இசைப்பதற்கென்றே ‘பாணர்’ என்ற குழு இருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். யாழ் மீட்டுவதையே தொழிலாக உடையவர்கள் என்றாலும் அவர்கள் யாழ்ப்பாணர், இசைப்பாணர்,மண்டைப்பாணர் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாணர்,இசைக்கும் யாழின் அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்று பகுக்கப்பட்டுள்ளார்.

தமிழர்கள் யாழினின்று எழும் இசைக்கே முதன்மை அளித்தனர். அதனாலேயே ஒரு நரம்பில் தொடங்கி மூன்று, ஐந்து, ஏழு….. என்று ஆயிரம் நரம்புகள் கொண்ட யாழ் உருவாகியது. தொடக்கத்தில் வடிவம் பற்றிய சிரத்தை இல்லையென்றாலும் சில காலங்களின் மகரம், செங்கோடு எனப் பல வகையான யாழ்கள் தோன்றின. இவ்வாறாக யாழ் கி.பி.9-ஆம் நூற்றாண்டுவரை பலவகையாக வளர்ந்தது. இதற்குப் பிறகு வடிவில் ஓரிரு வேறுபாடுகள் கொண்டு வீணையாக பரிணாமம் கொண்டது. அந்த வீணையே இசையுலகில் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது. யாழ் மறைந்ததற்கான சமூக பின்புலம்:யாழ் இசைக்கலைஞர்களான பாணர்கள் பெயரிலேயே இரண்டு சங்கநூல்கள் தோன்றியுள்ளதில் இருந்து யாழ் மற்றும் பாணர்களின் மதிப்பை அறியமுடிகிறது.

அந்நூல்கள், மன்னர்கள் பாணர்களைப் போற்றியும், புரந்தும் வந்துள்ளமையைக் காட்டுகின்றன. யாழ் பாடிக் கொண்டே இசைக்கும் கருவியாக இருந்துள்ளது. சாதாரண மக்களிடம் புழக்கத்தில் இருந்த யாழ் ஒரு காலக்கட்டத்தில் தெய்வத்தன்மை பெற்று வணக்கத்திற்கு உரியதாக மாறியது. சங்க இலக்கியம் மற்றும் முற்காலக் காப்பியங்களில் இசைக் கருவியாக யாழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் பக்தியிலக்கிய காலத்தில் யாழும் அதன் பரிணாமமான வீணையும் ஒருங்கே காணப்பட்டன என்பதை ‘ஏழிசை யாழ்,வீனை முரலக்கண்டேன்’ ‘பண்ணோடி யா‘வீணை பயின்றாய் போற்றி’ என்ற மாணிக்க வாசகரின் பாடல்கள் பிரதிபலிக்கின்றன. ஆனால் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீவக சிந்தாமணியின் ‘வீணை என்ற யாழையும் பாட்டையும் (730அடி)’ என்ற அடி யாழும், மிடறும் உடன்நிகழ்ந்த இசையே வீணை என்ற பொருள் தருகிறது.

மேலும், ‘வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான் (730 அடி)’ என்ற அடிக்கு உரை எழுதிய ஆசிரியர், சீவகன் காந்தர்வ தத்தையை யாழும், பாட்டும் வென்றான் என்று குறித்துள்ளார்.எனவே,யாழே வீணை என்று குறிக்கப்பட்டு பிற்காலத்தில் தனி இசைக்கருவியாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது. மேலும், யாழ் என்ற இசைக்கருவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த காலகட்டத்தில் அதிலிருந்த வேறொரு இசைக் கருவியான வீணை தோன்றியதற்கான காரணம் ஆய்விற்கு உரியது. சங்க காலத்திலேயே ஆரியர்களின் ஆதிக்கம் தொடங்கியது.

ஆரியர்கள் தங்களுக்கான மொழியை,நூல்களை, தெய்வங்களை,பழக்கவழக்கங்களை, கலைகளை உருவாக்கிக் கொண்டனர். தமிழரின் பண்பாட்டினை உள்வாங்கி, அவற்றை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். அதற்குச் சரியான சான்று பரதநாட்டியம்,கணிகையர் வீட்டில் வளர்ந்த பரதநாட்டியம்,ஒரு காலகட்டத்தில் ஆரியர்களின் கலை ஆசிரியர்களுக்கே உரிய கலையாக மாற்றப்பட்டது. வீணையும் அவ்வாறு உருவாக்கப்பெற்றதே. தமிழரின் ஆதி கருவியாக யாழின் வடிவிலிருந்து வீணை என்ற ஒரு இசைக்கருவியை உருவாக்கித் தங்களுக்குரியதாக அமைத்துக் கொண்டனர். அதனைத் தென்னிந்தியா முழுவதும் பரப்பினர்.வீணையின் மீது தெய்வத்தன்மையை ஏற்றி அதனைத் தெய்வங்களுக்கு உரியதாக அமைத்தனர். வீணையை ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே வாசிக்கும் நிலையினை உருவாக்கினர். ஆரியர்களின் ஆதிக்கமும் விணையின் வளர்ச்சியும் தமிழர்களின் இசைக்கருவிகளின் முதன்மையான யாழினை முற்றிலுமாக அழித்துவிட்டன. இந்த நிலையில் நமது இசைக் கருவியான யாழினை இலக்கியங்கள் வாயிலாக மீட்டெடுப்பது அல்லது நினைவுபடுத்துவது தேவையான ஒன்று.

-மணி நெல்லை

 

 

ஈழத்தமிழரின் ஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்!!

1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பது ஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான சித்தாந்தங்களை அலசுவது என இரகசியஇராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை 
குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோஅரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. 

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் .

“”தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்””

தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.ஈழம் உரும்பராய் மண்ணில் உதித்த மாபெரும் சூரியன் 1974 இல் எதிரிகளிடம் சிக்கிய வேளை சயனட் அருந்தி அன்று மறைந்தது.

இந்நிலையே கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது. வல்வெட்டித்துறையில் அப்பாவிப்பொதுமக்களை தேவையின்றி தாக்கும் சிங்களப்படைகளை திருப்பித்தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இவர்களின் இலக்கு தமிழ் என்னும் மொழிஉணர்வின் ஊடாக ஈழத்தமிழரின் இருப்பிற்கான அரசியல் அபிலாசைகளை நோக்கித்திரும்பியது. இதன் காரணமாக வல்வெட்டித்துறை என்ற சமூக வட்டத்தைவிட்டு ஈழத்தமிழரின் உரிமையை பெறுவதற்கு ஆயுதப்போராட்டமே ஒரேவழி என்பதை வெறுமனே கொள்கைரீதியாக அல்லாமல் நடைமுறைரீதியாக செயற்படுத்த முனைந்தனர்.

இந்நிலையிலேயே 1971 மார்ச் 11 ந்திகதி யாழ்ப்பாணம் பிரதான வீதியின் ‘பிறிமியர் கபே’யின் டிஸ்கோ நடனஅரங்கை திறந்து வைக்கவந்த மேயர் துரையப்பா மீது நடந்த தாக்குதல் முயற்சியில் அவர் தப்பிக் கொண்டார். அவருடைய கார் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருந்த இத்தாக்குதலை திரு.பொன்.சிவகுமாரன் திரு.பொன்.சத்தியசீலன் மற்றும் அவர்களது நண்பரான சத்தி என்பவர்களே திட்டமிட்டு நேரம்பார்த்து நடத்தியிருந்தனர். இவர்களுடன் இணைந்திருந்த ஞானமூர்த்தி சோதிலிங்கம் எனப்பட்ட பெரியசோதி இத்தாக்குதலிற்கான வெடிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான பணத்தினை வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபல தொழிலதி பரான திரு.கா.வடிவேலிடம் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பி டத்தக்கது. இத்தாக்குதலைத் தொடர்ந்து பொன்.சிவகுமாரனும் அரியரத்தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.

1968 யூலையில் நடந்த சமூக விடுதலைப்போராட்டமான மாவிட்டபுரம் ஆலயப்பிரவேசகாலத்தில் வல்வெட்டித்துறைக்கு வந்து தம்முடன் இணைந்து கொண்டதுடன் சிங்களஆயுதப்படைகளிற்கு எதிரான புரட்சிகர இராணுவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தமது அன்பிற்குரிய நண்பன் பொன்.சிவகுமாரனின் கைது நடேசுதாசன் குழுவினருக்கு கடும்சீற்றத்தை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக பொன்.சிவகுமாரனை காட்டிக்கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்ட கோண்டாவிலைச் சேர்ந்த தாடித்தங்கராசா மீது இவர்களின் கவனம் திரும்பியது. 1948இல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழினப்புறக்கணிப்பு திட்டமிட்டு பல்வேறு வடிவங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் இனரீதியான எதிர் தாக்கம் ஆயுதரீதியாக தமிழ்மக்களிடம் தோற்றம் பெறவில்லை என்றே கூறலாம். 1950 முதல் அரசபடைகளும் போர்க்குணமிக்க வல்வெட்டித்துறை மக்களும் தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு பெரியநீலா வணையிலும் 1958 இல் அரசபடைகளுடன் மக்கள் ஒருமுறை மோதிக் கொண்டனர். எனினும் இவைகள் யாவும் திட்டமிட்டரீதியாகவன்றி உணர்ச்சி வசப்பட்ட மக்களின் உடனடியான கோபாவேசத் தாக்குதல்களாகவே அமைந்திருந்தன.

1970 யூலை 13 ந்திகதி உரும்பிராயில் கலாச்சார உதவிஅமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு அதிலும் குறிப்பாக கூறினால் கார்ரயரின் கீழே சாதாரண கையெறிகுண்டினை சாதுரியமாக வைத்து கார்நகரும் போது ஏற்படும் அழுத்தத்தினால் குண்டினை வெடிக்கச்செய்த பொன்.சிவகுமாரன் மற்றும் பட்டு எனும் ஞானமூர்த்தி ஆனந்தக்குமரேசன் என்பவர்களின் செயல் அன்றையநாளில் அசாதாரணமானதே. 

இதுபோலவே 1971 மார்ச்சில் முன்கூறிய பிறிமியர் கபேக்கு வெளியில் நடந்த குண்டுவெடிப்பிலும் கெற்புடன் இணைந்த டைனமெற்றினை திரியினூடாக பரவும் நெருப்பின் மூலம் சிலநிமிட இடைவெளியில் வெடிக்கச்செய்த நிபுணத்துவமும் கூட அரசியல் நோக்கம் கொண்டமுயற்சியே. எனினும் மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளிலும் ஆளில்லாத வெறுமையான கார்களிலேயே குண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டிருந்தன.

ஆனால் தாடித்தங்கராசாவின் மீதானதாக்குதலில் நேரடியாகவே அவர் குறிவைக்கப்பட்டார். 1970யூலையில் உருவாக்கப்பட்ட இலங்கைக்குடியரசு அரசியலமைப்பு நிர்ணயசபையில் ஈழத்தமிழ்மக்களின் அனைத்துகட்சிகளின் சார்பில் தமிழர்கூட்டணியினரால் ஒருமுகமாக கொண்டுவரப்பட்ட ‘வல்வைத் தீர்மானங்கள்’ இன் நிராகரிப்பிற்கு காரணமாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவரும் ஈழத்தமிழர்களினால் துரோகி என வர்ணிக்கப்பட்டவருமான நல்லூர் பாராளுமன்ற உறுப்பினரான திரு.அருளம்பலத்தின் நெருங்கிய கையாளாகவே தாடித்தங்கராசா அன்று செயற்பட்டு வந்தார்.

அத்துடன் வாகனத்தரகர் என்ற போர்வையில் பல சமூகவிரோத செயல்களிலும் பொலிசாரின் உதவியுடன் இவர் ஈடுபட்டுவந்தார். முதலாவது நேரடியான தாக்குதல் என்பதால் இலக்கினை தாக்குதல் என்பதைவிட தாக்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு தப்புதல் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை போராளிகளிற்கு அன்று ஏற்பட்டிருந்தது. 

காரணம் வல்வெட்டித்துறையிலிருந்து கோண்டாவிலிற்கு சென்று பல நாட்க ளாக தாடியின் நடமாட்டங்களை அவதானித்தபோதும் அன்றைய நிலையில் கோண்டாவிலில் வைத்து தங்கராசாவை தாக்கிவிட்டு தப்பிவருவது கடின மான பணியென்பதைப் புரிந்துகொண்டனர். ஆயுதப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு அற்ற அக்காலத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து பிறிதொரு கிராமத்திற்கு சென்று அக்கிராமத்தவரையே தாக்கும்போது அல்லது தாக்கிவிட்டு தப்பும்போது ஏதுமறியா அப்பாவிப்பொதுமக்களுடன் ஏற்படும் தேவையற்ற மோதலைத் தவிர்க்க வேண்டியது முதன் நிலைக்காரணமானது.

அதுபோலவே தமிழ்இன உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக இரகசிய ஆயுதக்குழுக்களுடன் தமிழ்மாணவர் பேரவை தொடர்புகளை கொண்டிருந்த போதும் வௌ;வேறு ஊர்களிலும் சமூகங்களிலும் உருவாகி இருந்த தீவிரவாத இளைஞர்களை சத்தியசீலன் மட்டுமே இணைத்து அவர்களின் ஒரேயொரு தொடர்பாளராக விளங்கினார்.

இந்நிலையில் சிவகுமாரனின் கைதுடன் யாழ்ப்பாணத்தை விட்டுவெளியேறிச் சென்றிருந்த சத்தியசீலனின் ஒத்துழைப்பையும் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது. இதனால் எந்தநிலையிலும் பொலிசாரின் உதவியை பெற்றுக்கொள்ளும் தங்கராசாவை அவரது கிராமத்திற்கு வெளியில்வைத்து தாக்குவதென முடிவாயிற்று. இந்நிலையிலேயே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் தாடித் தங்கராசா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்நிதி கோவிலிற்கு வருகின்றார் என்பதை அறிந்துகொண்டனர்.

மாணவர்பேரவையின் தீவிரஆதரவாளராக விளங்கிய ஊ டீமணியம் என்பவர் கொடுத்ததகவலின் மூலம் இதனை இவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனைத் தொடாந்து 1971 மார்ச் மாதத்தின் பின்னாட்களில் வந்த வெள்ளிக்கிழமை அன்று இரவும்பகலும் உரசிக்கொள்ளும் மாலை நேரத்தின் மெல்லிய இருட்டொளியில் தங்கராசாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் கோவிலின் கிழக்குப்புறமாக சின்னச்சோதியும் ஜெயபாலும் மேற்க்குபுறமாக நடேசுதாசனும் மோகனும் குறிவைத்து காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்பிற்கு ஏற்றார்ப்போல் கோவிலின் பின்வீதியில் குறித்த வளையத்தினுள் வைத்து நடேசுதாசனால் தாக்குதல் நடத்தப்பட்டது. இடது முழங்கைக்கு மேல் குண்டடிப்பட்ட காயத்துடன் ஓடிய தங்கராசா கோயில் வழிபாட்டிற்கு வந்த மக்களுடன் ஒன்றாக கலந்துவிடவே அத்துடன் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இந்த வரலாற்றுத்தாக்குதலில் தமிழீழ விடுதலைப்போராட்ட முன்னோடிகளான திரு.நடேசுதாசன் சின்னச்சோதி ஜெயபால் மற்றும் மோகன் என்போர் நேரடியாக கலந்து கொண்டனர். எனினும் அத்தாக்குதலின் முன்பும் பின்புமான பல செயற்பாடுகளில் குறிப்பாக இன்றைய இராணுவ வார்த்தைகளில் கூறினால் ஒரு தாக்குதலின் மிகஇன்றியமையாத செயற்பாடான பின்கள வேலைகளில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

நாற்பதுவருடங்கள் நீண்ட அவரது போராட்டப்பாதையில் தாக்குதலணியின் ஓர்அங்கமாக அவர் கலந்துகொண்ட முதலாவது சரித்திரப்பிரசித்தி பெற்ற தாக்குதல் இதுவேயாகும். இத்தாக்குதலில் முன்னின்ற திரு.நடேசுதாசன் தாடித்தங்க ராசாவினால் அடையாளம் காணப்பட்டதனால் பொலிசாரின் கைதில் இருந்து தப்புவதற்காக தனது பகிரங்க நடமாட்டத்தை தவிர்த்து தனது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தானர்.

 உமா மகேஸ்வரன் 

சூலை 16 புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் உட்பூசல் காரணமாகவும் இந்திய அரசின் சூழ்ச்சியாலும் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாள்.

இலங்கை நிலஅளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.

இக்காலகட்டத்தில் அவர் தமிழ்த் தலைவர்களுடன் சிறுசிறுகுழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும்ஈடுபட்டு வந்தவர்.

பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கையூடாகவே போராட்டப்பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.

அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் காரணமாக 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்)த்தை தோற்றுவித்தார்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சு பெற்று வரலாற்றில் தொடர்ந்து பயணித்தது.

முரண்பாடுகள் அவ்வப்போது மோதல்களாகவும் அமைந்தன. இருப்பினும் இதற்கு காரணம் இந்திய றோவின் சூழ்ச்சியே என பின்னாளில் காலம் உணர்த்தி
யது.

தமிழ் போராளிகளிடையே பிரிவினைகளை வளர்த்து ஒருவரை ஒருவர் மோதவிட்டு பார்க்கும் கொடும் செயலை அக்காலத்தில் இந்தியா தீவீரமாகவே செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு நல்குகின்றோம் என்ற பெயரில் இந்தியா தனக்கு ஏவல் நாய்களாக எம் போராளிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கிலும் எக்காரணம் கொண்டும் வலுவான ஒருமைப்பாடு கொண்ட ஈழ விடுதலைப் போராட்டம் தோன்றி விடக் கூடாது என்ற சூழ்ச்சியோடும் பல போராட்டக் குழுக்களை ஆயுதங்கள் கொடுத்து வளர்த்து ஒன்றோடு ஒன்று மோதி அழிய விட்டு ஈழத் தமிழ் இளைஞர்களின் அழிவில் குளிர் காய்ந்தது இந்தியா.

பல குறைகள் தவறுகள் தனி நபராக சுட்டிக் காட்டப்பட்டு உட்கட்சி பிரிவினை கருத்து முரணால் முன்னாள் புளொட் தோழர்களால் இந்திய அரசின் ரோ பிரிவின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார் உமாமகேஸ்வரன்.

இனியேனும் ஈழ விடுதலைக்காக போராடும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த பிரிவினை இல்லா போராட்ட சக்தியாக ஓரணியில் வலிமையாக ஒன்று பட்டு எம் பொது எதிரியை வெல்ல நேர்மையாக பிரிவினைகள் இன்றி போராட வேண்டும்!

இனத்தின் விடுதலைக்காக ஒன்றுபடும் அனைத்து போராட்ட சக்திகளும் கை கோர்த்து பயணிக்கும் எழுச்சி மிக்க காலம் மீண்டும் உருவாகி எம் விடுதலை உறுதியாகும் என்பது உறுதி!

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!

தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் தந்த பதிலடிக் கவிதை…!

தமிழால் தமிழர் ஆயினர் அன்னவர்
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
‘தமிழில் ஏதுளது’ என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
‘தமிழால் பயன் ஏது?” என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ம.பொ.சி. எழுதிய ‘எனது பார்வையில் பாவேந்தர்’ நூலிலிருந்து.

(1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் அவர்கள் உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். அதற்கு காமராசரும், பெரியாரும் முட்டுக்கட்டையாக இருந்தனர். தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை ஆதரித்துப் பேசிய ம.பொ.சி.யை பெரியார் ‘தாய்ப்பால் பைத்தியம்’ என்று பட்டம் சூட்டி அழைத்தார்.

இதற்கு பதிலடியாக ம.பொ.சி. ‘பரங்கிமொழி அகன்றால் பகுத்தறிவு வளரும்’ என்று கட்டுரை தீட்டினார். அப்போது பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பாரதிதாசன் வாளாவிருக்க வில்லை. தமிழைப் பழித்தும் ஆங்கிலத்தை தூக்கிப் பிடித்தும் பேசி வந்த பெரியாரை துணிச்சலாக தனது எழுதுகோல் ஈட்டி கொண்டு தாக்கினார். அப்போது எழுதியது தான் மேற்கண்ட கவிதையாகும்.)

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்! தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம் !!
இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள். தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர்.

ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர். இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

 

 

 

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான

பிற மொழிப் பெயர்கள் பட்டியல்

இயற்கை – NATURE

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்

  1. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN
    2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG
    3. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE
    4. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE
    5. மலை நிமிர்வு இருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE

நிலைத்திணை / பயிர் உயிரிகள் – PLANTS

  1. தாமரை இருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE
    7. எழும்பு தாமரை இருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE
    8. பூட்டிய தாமரை இருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE
    9. நாணல் முதுகு இருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE
    10. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE
    11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE

விலங்கு – CREATURES

நீர் உயிரிகள் – AQUATICS

  1. தவளை இருக்கை – பெக்காசனம் – FROG POSTURE
    13. மீன் இருக்கை – மச்சாசனம் – FISH POSTURE
    14. சுறவம் இருக்கை – மகராசனம் – SHARK POSTURE
    15. முதலை இருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE
    16. சங்கு இருக்கை /
    உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
    17. ஆமை இருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE

ஊர்வன – REPTILES

  1. தேள் இருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE
    20. பாம்பு இருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE

நடப்பன – VERTEBRATE

  1. ஆமுகவாய் இருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE
    22. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE
    23. பூனை இருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE
    24. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE
    25. நாய்முக இருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
    26. புலி இருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE
    27. அரிமா இருக்கை – சிம்மாசனம் – LION POSTURE
    28. மிடுக்கான குதிரை இருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
    29. முயல் இருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE
    30. நரி இருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE

பறப்பன – AVES & INSECTS

  1. வெட்டுக்கிளி இருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE
    32. அரை வெட்டுக்கிளி இருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE
    33. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE
    34. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE
    35. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
    36. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE
    37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE
    38. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE
    39. சேவல் இருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE
    40. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE
    41. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE

நடனம் – DANCE

  1. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA
    43. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE
    44. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE
    45. வீர அடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE

1முத்திரை – GESTURE

  1. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE
    47. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE
    48. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE
    49. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE
    50. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE

கருவிகள் – TOOLS

  1. நாற்காலி இருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE
    52. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE
    53. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE
    54. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE
    55. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE
    56. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE
    57. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE
    58. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE
    59. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
    60. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE

தொழில் – ACTIVITIES

  1. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE
    62. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE
    63. நெற்றிக்கண் வழியன் இருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE
    64. அம்மி அரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE
    65. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE
    66. தேரோட்டி இருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE
    67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் – ORGANS OF HUMAN BODY

  1. இணை காலடி இருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE
    69. ஒரு காலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE
    70. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE
    71. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE
    72. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE
    73. மழலை இருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
    74. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE
    75. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
    76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
    77. மாற்று அமர் இருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE
    78. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE
    79. நீள்காலடி இருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT
    80. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP
    81. அரை உடல் இருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE
    82. முழு உடல் இருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND
    83. பாதி முழு உடல் இருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND
    84. மேடை இருக்கை – பீடாசனம் – STAGE POSTURE
    85. பகுதலை இருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED
    86. தலை இருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE

தூய்மை – CLEANSING

  1. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE
    88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK
    89. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE
  2. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH
    91. தலை தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN
    92. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH
    93. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING
    94. நீர்த் தூய்மை – சலநேதி – WATER CLEANSING
    95. குளிர் சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE
    96. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION
    97. நாடித் தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE
    98. தேனீ ஒலி – பிராமரி – HONEY BEE HISSING
    99. கண் தூய்மை – திராடகா – EYE CLEANSING
    100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH
  3. உள் மூச்சு – அனுலோமம் – INHALING
    102. வெளி மூச்சு – விலோமம் – EXHALING
    103. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX

நிறைவு நிலை – PACIFICATION

  1. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE
    105.. அமைதி இருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE

திருமணப் பொருத்த அட்டவணை!!

திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து ஜாதகம் வாங்குவதை முன்னிட்டு கீழ்கண்ட அட்டவணை வழங்கப்படுகிறது. அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில் தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். அல்லது சுத்த ஜாதகங்களைத் தேர்ந்தெடுத்து அதிக பொருத்தம் அமைந்த வரனை பரிசீலித்து செய்தால் வாழ்க்கை வசந்தமாகும் இல்லறம் நல்லறமாகும்.

வருத்தமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் பத்தாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை முன்னிட்டு பொருத்தத்தை குறிக்கும். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக கிரக தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணிப் பார்ப்பது வழக்கம்.

குறிப்பாக கணப் பொருத்தம் என்பது ஒருவரின் குணத்தைக் குறிக்கும். ரஜ்ஜூ என்பது மாங்கல்யப் பொருத்தம், மகேந்திரம் என்பது புத்திர பாக்கியத்திற்குரிய பொருத்தம். இவற்றைப் போல ஒவ்வொரு பொருத்தமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் விதத்தில் உள்ளது. இவற்றில் முக்கியப் பொருத்தங்கள் பலவும் பொருந்தியுள்ளதா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.

இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். முன்னேற்றமும் கிட்டும்.பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?

1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசிஅதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை

பெண்ணின் நட்சத்திரம் அஸ்வினி (மேஷ ராசி)
வ.
  ஆணின் நட்சத்திரம் ராசி அமையும் பொருத்தங்கள், மொத்தப்பொருத்தம்

1.    அஸ்வினி (மேஷம்)    பொருத்தம் உண்டு
2.    பரணி (மேஷம்)   – அமையும்பொருத்தங்கள் – 1, 2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம்  –  7
3.    கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) – அமையும்பொருத்தங்கள் –  2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம் – 6
4.       கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) – அமையும்பொருத்தங்கள் – 2, 5, 7, 9, 10   மொத்தப்பொருத்தம் – 5
5.    ரோஹிணி (ரிஷபம்)  – அமையும்பொருத்தங்கள்   1, 2, 3, 5, 7, 9, 10 மொத்தப்பொருத்தம்   7
6.      மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்)  – அமையும்பொருத்தங்கள் –  2,5,7,9,10  மொத்தப்பொருத்தம்  5
7.       மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்)  – அமையும்பொருத்தங்கள்  – 2,5,9,10  மொத்தப்பொருத்தம்  4
8.    திருவாதிரை (மிதுனம்) – அமையும்பொருத்தங்கள்  – 1,2,5,9,10 – மொத்தப்பொருத்தம் –  5
9.    புனர்பூசம் 1,2,3-ம் பாதம் (மிதுனம்) – அமையும்பொருத்தங்கள் – 2,3,5,9,10 – மொத்தப்பொருத்தம்  5
10.    புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) – அமையும்பொருத்தங்கள்  – 2,3,5,7,9,10 –  மொத்தப்பொருத்தம் – 6
11.    பூசம் (கடகம்)   – அமையும்பொருத்தங்கள் – 1,2,4,5,7,9,10 – மொத்தப்பொருத்தம் – 7
12.     ஆயில்யம் (கடகம்) – அமையும்பொருத்தங்கள் –   ரஜ்ஜூ தட்டும்    – மொத்தப்பொருத்தம் –
13.     மகம் (சிம்மம்) – அமையும்பொருத்தங்கள் – ரஜ்ஜூ தட்டும் –    மொத்தப்பொருத்தம்-
14.     பூரம் (சிம்மம்) – அமையும்பொருத்தங்கள்  –   1,2,4,5,7,8,9,10 –  மொத்தப்பொருத்தம் – 8
15.    உத்திரம் 1-ம் பாதம் சிம்மம் – அமையும்பொருத்தங்கள்  – 2,4,5,7,8,9,10 – மொத்தப்பொருத்தம் –  8
16.    உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி)  – அமையும்பொருத்தங்கள் –  2,4,5,9,10  மொத்தப்பொருத்தம் – 5
17.  ஹஸ்தம் (கன்னி)  – அமையும்பொருத்தங்கள் –  1,2,3,4,9,10 –   மொத்தப்பொருத்தம் – 6
18.    சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி)  – அமையும்பொருத்தங்கள் –  2,4,5,9,10 மொத்தப்பொருத்தம்  – 5
19.    சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்)  – அமையும்பொருத்தங்கள் –  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் –  7
20.     சுவாதி (துலாம்) – அமையும்பொருத்தங்கள்  –  1,2,4,6,7,9,10 –  மொத்தப்பொருத்தம் – 7
21.    விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்)  – அமையும்பொருத்தங்கள்  – 2,3,4,5,6,7,9,10 –  மொத்தப்பொருத்தம் – 8
22.    விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்)   – அமையும்பொருத்தங்கள் – 2,3,4,5,7,8,9,10    மொத்தப்பொருத்தம் – 8
23.    அனுஷம் (விருச்சிகம்)  – அமையும்பொருத்தங்கள்  – 1,2,4,5,7,8,9,10 – மொத்தப்பொருத்தம் – 8
24.    கேட்டை (விருச்சிகம்)  – அமையும்பொருத்தங்கள்  – ரஜ்ஜூ தட்டும் –   மொத்தப்பொருத்தம் –
25.    மூலம் (தனுசு)- அமையும்பொருத்தங்கள் – ரஜ்ஜூ தட்டும்  – மொத்தப்பொருத்தம் –
26.   பூராடம் (தனுசு)    – அமையும்பொருத்தங்கள் – 1,2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம்  – 8
27.    உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) –  அமையும்பொருத்தங்கள் – 2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் – 7
28.    உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்)  – அமையும்பொருத்தங்கள் –  2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம் – 7
29.    திருவோணம் (மகரம்) –  அமையும்பொருத்தங்கள் – 1,2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  –  9
30.  அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்) – அமையும்பொருத்தங்கள்  –  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் – 7
31.    அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) – அமையும்பொருத்தங்கள் – 2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  – 7
32.    சதயம் (கும்பம்)  – அமையும்பொருத்தங்கள் 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  – 8
33.    பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) –  2,3,4,5,6,7,9,10 – மொத்தப்பொருத்தம் – 8
34.    பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்)  -அமையும்பொருத்தங்கள் –  2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  – 8
35.    உத்திரட்டாதி (மீனம்) – அமையும்பொருத்தங்கள்  – 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம் –  8
36.    ரேவதி (மீனம்)  அமையும்பொருத்தங்கள்   ரஜ்ஜூ தட்டும்.    – மொத்தப்பொருத்தம்

தொகுப்பு:  சிவப்பிரியன்

விருப்பம் ·  · பகிர்

 

சிந்துசமவெளி நாகரிகம்…!

 

சிந்துச் சமவெளி நாகரிகம் – தமிழர் நாகரிகமே…!
.
*இது உலகின் மிக தொன்மையான நாகரிகம்
*மிகப் பெரிய நாகரிகம்
*பல துறைகளில் சிறந்து விளங்கும் நாகரிகம்
*இது நம் தமிழர்களின் நாகரிகமே……!

“புதிய தமிழ்ப்புலிகள்”
“தமிழீழ விடுதலைப்புலிகள்” ஆக உருவெடுத்தது – 05..05.1976

“புதிய தமிழ்ப்புலிகள்” என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த பிரபாகரன், அதை ஒரு பெரிய ராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். இந்த அமைப்புக்கான சின்னத்தையும் அவர் வடிவமைத்திருந்தார். வட்டத்தின் நடுவே, கர்ஜனை செய்யும் புலியின் தலை. பின்னணியில் இரு துப்பாக்கிகள். “தமிழீழ விடுதலைப்புலிகள்” என்ற எழுத்துக்கு மேலே, வட்டத்தைச் சுற்றிலும் துப்பாக்கித் தோட்டாக்கள். இதுதான் விடுதலைப்புலிகள் அமைப்பின் சின்னம்.

அமைப்பை நிர்வாகிக்க, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ராணுவ தளபதி, தலைவர் ஆகிய பொறுப்புகளை பிரபாகரன் ஏற்றார். அவரைத் தவிர செல்லக்கிளி, நாகராஜா, அய்யர், விஸ்வேஸ்வரன் ஆகியோர் முதலாவது மத்தியக் குழுவில் இடம் பெற்றனர். விடுதலைப்புலிகளுக்கு என்று கடுமையான சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் புகை பிடிக்கக்கூடாது; மது அருந்தக்கூடாது; ‘செக்ஸ்’ கூடாது. குடும்பத்துடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும். இயக்கத்தை விட்டு வெளியேறுகிறவர்கள், வேறு இயக்கங்களில் சேரக்கூடாது; புதிய இயக்கம் தொடங்கக்கூடாது.

தமிழ் ஈழத்தை அடைய ஒரு செயல் திட்டத்தை பிரபாகரன் வகுத்தார். அது பின்வருமாறு:- “காட்டிக்கொடுக்கும் துரோகிகளை ஒழிக்க வேண்டும். போலீசுக்கு உளவு சொல்பவர்களை அழிப்பதன் மூலம், நமது திட்டங்களையும், வியூகங்களையும் போலீசாரும், ராணுவமும் அறிந்து கொள்ள முடியாதபடி தடுக்கலாம்.
இதுவே நமது வெற்றிக்குத் துணை நிற்கும்.

ஆயுதப்புரட்சி நடத்தி, இலங்கை அரசாங்கத்தை செயல்பட முடியாதபடி முடங்கச் செய்யவேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளை ஒருங்கிணைத்து “தமிழீழம்” அமைப்பதற்கு முதல் படியாக, அந்தப் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவ முகாம்களை அழிக்க வேண்டும். அந்தப் பகுதிகளை விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். தமிழ் ஈழத்துக்கு முழு சுதந்திரம் பெற்று, அங்கு சோசலிச ஜனநாயகக் குடியரசை நிறுவவேண்டும்.” மேற்கண்டவாறு செயல் திட்டத்தை வகுத்தார், பிரபாகரன்.

தமிழீழம் அடைய ஆயுதம் ஏந்திப் போராடிய போராளிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தாலும், பிற்காலத்தில் மோதிக்கொண்டார்கள். ஒற்றுமையாக செயல்பட்ட காலத்தில், கைகோர்த்து நிற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:

  1. சிறிசபாரத்தினம் (தமிழீழ விடுதலை இயக்கம் – TELO)
    2. பத்மநாபா (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF)
    3. பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகள் – LTTE)
    4. பாலகுமார் (ஈழப்புரட்சி அமைப்பு – EROS)

 

இலங்கையை வென்ற ராஜராஜ சோழன் !

கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகன்முதலாம் இராஜராஜ சோழன். சுந்தர சோழனுக்கும், சேர நாட்டு வானவன் மாதேவிக்கும், ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”. இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்டான்.

இவன் ஆட்சியின் 3–ம் ஆண்டு முதலே “ராஜ ராஜ சோழன்” எனப்பட்டான். தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே “மும்முடிச் சோழன்” என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது. இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும்,”காந்தளூர்ச் சாலை கலமறுத்த” என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்படுகிறது.

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, கேரளாவிலுள்ள “விழிஞம்” என்னும் கடற்கோட்டையைப் பிடித்தான். உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியதும், முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை, குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் “கலிங்கத்துப் பரணி” உதகையைக் கைப்பற்றியதை பற்றி குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும், இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால், அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று, உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும், மேலும் இது இராஜராஜ சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார்.

இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது ‘திருமகள் போல’ என்று தொடங்கும் கி.பி. 993–ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். ‘கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது’, ‘தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்த பெரிய கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29–ம் ஆண்டில் தானமாக அளித்தான்’ என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் போது , ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981-ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவம்சம் குறிப்பிடவில்லை.

‘மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது. ராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வட பகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம், இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது.இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், இராஜராஜன் சிவனுக்கு அழகிய சிவாலயம் அமைத்தான். இந்த சிவாலயம், தஞ்சை பெரிய கோயில் போன்றே அமைந்துள்ளது.மைசூர் நாட்டைச் சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன.

இராஜராஜனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து, வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர், மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியும், தலைக்காட்டையும் தாக்கிய சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது.

மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜனின் படைத்தளபதி கொண்டு வந்தார்.கர்நாடகத்தில் தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007-ம் ஆண்டைச் சேர்ந்த சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, “சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், கன்னியரை மனைவியராக்கியும், அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்” கூறுகிறது.

அங்கோர் வாட் (Angkor Wat) 

அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும்.

இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல். சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது.

1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். இரண்டாம் சூரியவர்மன் (Suryavarman II ([Khmer]) (இறப்புக்குப் பின்னர்: பரமவிஷ்ணுலோகன், Paramavishnuloka) கெமர் பேரரசை கிபி 1113 முதல் கிபி 1145-1150 வரை ஆண்ட பேரரசர். இவர் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற பெருமாள் கோயிலைக் கட்டியவர். இது உலகின் மிகப் பெரும் கோயிலாகக் கருதப்படுகிறது.

இவருடைய கட்டிடக் கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வளார்கள் கருதுகிறார்கள். இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதபுரம் (Yashodapura) ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon), பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான்.

இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர்.

இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது ,

அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!! இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!!

வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்ப

SHARE