மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

411
மத அமைப்புக்களுடன் மோத வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மத அமைப்புக்களுடன் அமைச்சர்கள் மோதுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மோதிக் கொள்வதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக் வாய்ப்புக்கள் அதிகமாககும். மத அமைப்புக்களுடன் வேலை செய்யும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும், மத அமைப்புக்கள் ஏதேனும் குற்றம் சுமத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அவர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, பதிலளிக்கப் போனால் இந்தப் பிரச்சினை நீண்டு கொண்டே செல்லும். பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அவர்கள் எல்லோரையும் விமர்சனம் செய்கின்றார்கள், அவர்களுக்கு பதிலளிக்க முயற்சித்தால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

SHARE