அமேஷானில் இதுதான் நடக்கின்றது! மக்களுக்கு எச்சரிக்கை

233

அமேஷான் என்பது உலகின் மிகப்பெரிய ஒன்லைன் வியாபார நிலையம் ஆகும்.

இங்கு அனைத்து வகையான பொருட்களையும் ஓர்டர் செய்து தத்தமது நாட்டிற்கு வரவழைத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு செய்வற்கு அமேஷன் கணக்கானது அவசியமாகும்.

இக் கணக்கினை இரு வகையாக அமேஷன் நிறுவனம் வழங்கிவருகின்றது. அவற்றில் ஒன்று இலவச கணக்காகும், மற்றையது Prime Member எனப்படும் கட்டணம் செலுத்தப்பட்ட கணக்காகும்.

இப்படியான நிலையில் கட்டணம் செலுத்தாத சாதாரண பயனர்கள் புத்தகங்களை கொள்வனவு செய்யும்போது சாதாரண பெறுமதியை விட அதிகமான பணத்தை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் செய்தியானது இந் நிறுவனத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருந்த பயனர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதேவேளை இந்த நடைமுறை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE