ஆப்பிள் நிறுவனம் தனது வளையும் தன்மை கொண்ட ஐபோன்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருந்த விடயத்தில் தற்போது அந்த காப்புரிமை கிடைத்துள்ளது.
கைப்பேசி தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனமானது வளையும் தன்மை கொண்ட கைப்பேசியை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்தே ஈடுபட்டு வருகிறது.
ஆனாலும் இன்னும் அதற்கு செயல் வடிவத்தை கொடுத்து பொது விற்பனைக்கு அந்த கைப்பேசியை கொண்டு வர தயங்கி வருகிறது ஐபோன்.
அதற்காக முன்பு இரண்டு முறை காப்புரிமை கேட்டு விண்ணப்பித்த போது நிராகரிக்கப்பட்ட இந்த விடயம் தற்போது ஆப்பிளுக்கு சாத்தியமாகியுள்ளது.
அந்த காப்புரிமையில், கார்பன் நானோகுழாய்கள், பீங்கான் துகள் போன்றவற்றை சேர்த்து புதிய வளையும் தன்மை கொண்ட கைப்பேசியானது தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஐபோனானது தனது பத்தாவது வருட தொடக்க நாளை கொண்டாட உள்ள இந்த வேளையில், இந்த வளையும் தன்மை கொண்ட கைப்பேசி விரைவில் விற்பனைக்கு வரும் என எதிப்பார்க்கப்படுகிறது.