தானாக புதுப்பித்தலுக்குள்ளாகும் இலத்திரனியல் சாதனம் கண்டுபிடிப்பு!

228

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

சிதைவுகள் ஏற்படும் சமயத்தில் தானாகவே மீள் புதுப்பித்தலுக்கு உள்ளாகக்கூடிய இலத்திரனியல் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சான்டிக்கோ மற்றும் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இச் சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

விசேட காந்த மையினைக் கொண்டு 3 மில்லி மீற்றர்கள் தடிப்புக்கு பாலம் போன்று செயற்பட்டு சிதைவுகளை மறைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை ஆடைகளில் ஏற்படக்கூடிய கிழிவுகள் அல்லது வெட்டுக்கள் என்பவற்றினையும் உடனடியாக மீளிணைக்கும் ஆற்றல் படைத்தவையாக காணப்படுகின்றன.

மின்கலம் ஒன்றின் உதவியுடன் செயற்படும் இச்சாதனத்துடன் LED மின்குமிழ் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.

இம் மின் குமிழ் ஆனது மீள் புதுப்பித்தல் செயற்பாடு நிறைவு பெற்றதை காட்டும் வகையில் ஒளிரும்.

மேலும் மீள் செயற்பாடு நிகழ்வதற்கு வெறும் 0.05 செக்கன்களே எடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சாதனம் தொடர்பான மேலதிக விளக்கத்தினை வீடியோவில் காணலாம்.

SHARE