முதன் முறையாக கமெராவுடன் ஸ்மார்ட் கடிகாரம்!

211

625-500-560-350-160-300-053-800-748-160-70-4

ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக் கடிகாரங்களுக்கு சிறந்த வரவேற்பு இருப்பது யாவரும் அறிந்ததே.

இதில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் கடிகாரங்களுக்கு அதிக மவுசு காணப்படுகின்றன.

இப்படியான நிலையில் முதன் முறையாக கமெராவுடன் கூடிய ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

CMRA எனப்படும் இக் கடிகாரத்தில் 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களைக் கொண்ட இரண்டு HD கமெராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் ஊடாக HD தரத்திலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ முடியும்.

மேலும் இதில் தரப்பட்டுள்ள மின்கலத்தினை ஒரு முறை சார்ஜ் செய்வதன் ஊடாக 100 புகைப்படங்கள் மற்றும் 30 நிமிடங்கள் வரையான வீடியோவினை பதிவு செய்ய முடியும்.

இது தவிர LED இன்டிக்கேட்டர் ஒன்றும் கமெராவுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் சில்லறை விலையானது 249 டொலர்களாக இருக்கின்ற போதிலும், மொத்த விற்பனைக்காக முன்பதிவு செய்பவர்கள் 149 டொலர் பெறுமதியில் பெற்றுக்கொள்ள முடியும்.

மூன்று வகையான வர்ணங்களில் கிடைக்கக்கூடிய இக் கடிகாரம் 2017ம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE