ஐ.பி.எல். போட்டியை குறை கூறுவது தவறு: பீட்டர்சன் சொல்கிறார்

451
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது.

மோசமாக விளையாடி இங்கிலாந்திடம் சரண்டர் ஆனதால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்கள்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஐ.பி.எல். போட்டி தான் முக்கிய காரணம் என்று முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் பிஷன்சிங் பெடி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் டெஸ்டில் இந்தியாவின் தோல்விக்கு ஐ.பி.எல். போட்டியை குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பீட்டர்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதால் தான் டெஸ்டில் சரியாக ஆடவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு மலிவான குற்றச்சாட்டாகும். டெஸ்டில் சரியாக ஆடாததற்காக ஐ.பி.எல். போட்டியை குற்றசாட்டுவது தவறனாது.

முரளி விஜய் முதல் டெஸ்டில் சதம் அடித்தார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் சிறப்பாக ஆடினார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அனைவரது கனவும் நனவாகி இருக்கும். முரளி விஜய் ஐ.பி.எல்.லில் விளையாடுவார். இதனால் ஐ.பி.எல். போட்டியை குறை கூற வேண்டாம்.

இந்திய வீரர்கள் வெளி நாடுகளில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற வேண்டும். புஜாரா இங்கிலாந்து கவுண்டியான் டெர்பிசையரில் ஆடும் முடிவு வரவேற்கத்தக்கது. இதேபோல இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் எப்படி பந்துவீச வேண்டும் என்ற அனுபவத்தை பெற வேண்டும். ஒவ்வொருவருக்கும் இதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பீட்டர்சன் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்காக ரூ.9 கோடிக்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE