TNA–மோடி சந்­திப்­பா­னது இலங்­கைக்கு ஐஸ்­வாளி சவால்: தயான் ஜய திலக்க:-

439

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை இலங்கைக்கு ஐஸ் வாளி சவால் (ice bucket challenge) என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜய திலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலையில் குளிர்ந்த நீரை ஊற்றும் ஐஸ் வாளி சவால் என்றே நான் காண்கிறேன். இந்திய பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்தில் ஐஸ் வாளியில் தண்ணீர் நிரப்பியுள்ளார்.அரசாங்கத்திடம் மண்டியிட்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் வரும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதில்லை என அரசாங்கம் எண்ணியது.
கூட்டமைப்பினர் யார் என்ற மமதையில் அரசாங்கம் இருந்தது. தென் ஆபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ராமபோஸா, யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார். இதன் பின்னர் இந்திய பிரதமர் சந்தித்தார்.இந்த பேச்சுவார்த்தையை பார்க்கும் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை போல் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காணப்பட்டது.
இதன் போது இலங்கையில் வீங்கிய தலை மீது பிரதமர் மோடி ஐஸ் தண்ணீரை ஊற்றினார்.நரேந்திர மோடி பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அழைக்க வேண்டாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
எனினும் மோடி, மகிந்த ராஜபக்ஷவை அழைத்தார். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டே இருந்தது. அப்போது இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பமும் இருந்தது. நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி 13வது திருத்தச் சட்டம் குறித்து நினைவுபடுத்தினார்.
ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், 13வது திருத்தச் சட்டம் பற்றி பேசிய குறித்து குறிப்பிடவில்லை. அதில் இருந்து சிறு விரசம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், இந்திய அமைச்சரவை அமைச்சர் பதவியை வகிக்காத சுப்ரமணியன் சுவாமியை வரவழைத்து பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்ற செய்து, அவர் கூறிய விடயங்களை இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என நம்ப ஆரம்பித்தது.
இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாடோ சுப்ரமணியன் சுவாமியின் நிலைப்பாடோ அல்ல.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமரை மாத்திரம் சந்திக்கவில்லை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தை சேர்ந்த எவரையும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் இதுவரை சந்திக்கவில்லை. அயல் நாட்டுடன் மேற்கொள்ளும் தொடர்புகளில் குறித்த முகாமைத்துவத்தின் குறைபாட்டையே இது காட்டுகிறது எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
SHARE