வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு மிகவும் எதிர்பார்த்த வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வாய்ஸ் காலிங் வசதி உள்ளது.
இந்நிலையில் எல்லா தரப்பினரும் வீடியோ காலிங் செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை அதிகமான போன்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வகையினருக்கும் இந்த சேவையானது சென்றடைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், இந்த வீடியோ காலிங்கில் தற்போது முன்னணி வகிக்கும் ஸ்கைப் மற்றும் ஆப்பிள் பேஸ்டைம்க்கு இந்த வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.