கோஹ்லியுடன் திருமணமா? அனுஷ்கா பளிச் 

426



மும்பை: கோஹ்லியுடன் திருமணமா என்றதற்கு பதில் அளித்திருக்கிறார் அனுஷ்கா சர்மா.பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் கோஹ்லியும் ஷாம்பு விளம்பரம் ஒன்றில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சுற்றியதுடன் வெளிநாடுகளுக்கும் சென்று பொழுதை கழித்தனர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கிசுகிசு பரவியது.

சமீபத்தில் இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்  செய்தபோது கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா தங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.  கோஹ்லியுடன் அனுஷ்கா தங்குவது ஏன் என்று அணி நிர்வாகத்தினர் கேட்டபோது, ‘விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களாம் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. இருவரும் நெருங்கி பழகுவதையடுத்து விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவித்திருக்கிறார். ‘கோஹ்லியை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என்று அனுஷ்கா சர்மாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE