இதுவரை கண்டிராத புதிய மொடலில் அசத்த வரும் ஐபோன் 8

258

செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் 8 மொடலை வித்தியாசமான பிளிப் டைப் வடிவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, 90 களில் மோட்டோ ரோலா செல்போன் நிறுவனம் clamshell எனப்படும் பிளிப் டைப் மொடல் செல்போனை கொண்டு வந்தது. பிளிப் மொடல்கள் முன்னர் நன்றாக புகழடைந்திருந்தாலும், பின்னர் மெல்ல மெல்ல காணாமல் போனது.

இந்நிலையில், பிளிப் மாடலில் போன் தயாரிக்க ஐபோன் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் காப்புரிமை வாங்கியுள்ளது.

இந்த பிளிப் வளையும் தன்மை கொண்ட செல்போன்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஐபோன் கடந்த 2013 ஆண்டிலிருந்தே ஈடுபட்டு வருகிறது.

அந்த காப்புரிமையில், பின்னாளில் வரவிருக்கும் ஐபோன்கள் கண்ணாடி, பீங்கான், பைபர் மற்றும் அலுமினியம் கொண்டு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரவிருக்கும் ஐபோன் 8ல் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இடம்பெறும் என தெரிகிறது.

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஐபோன் நிறுவன ஊழியர் கூறுகையில், வரும் 2017 ஆம் வருடம் ஐபோன் நிறுவனத்துக்கு பத்தாவது ஆண்டு விழாவாகும். இந்த சிறந்த தருணத்தில் இதுவரை ஐபோனில் வராத புதிய விடயத்தை செய்ய முடிவு செய்துள்ளார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையில், அடுத்த வருடம் வெளிவரவிருப்பதாக சொல்லப்படும் ஐபோன் 7S மொடல்கள் நிறுத்தப்பட்டு, ஐபோன் 8ல் ஆப்பிள் நிறுவனம் தனது முழு கவனத்தையும் செலுத்தும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE