போலீஸ் பிடியில் பூனம் டுவிட்டரில் கதறல் 

413




பலாத்கார வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பூனம் பாண்டே தன்னை பற்றி தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று கதறுகிறார். பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதுடன், தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சி படங் களை வெளியிட்டு பரபரப்பும் ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. அந்த இமேஜ் தற்போது அவருக்கு வில்லங்கமாக மாறி இருக்கிறது. சமீபத்தில் சுனில் பிளாஸ்கர் என்பவர் மும்பை போலீ சில் சிக்கினார். அவர் மீது இளம்பெண் மீதான பலாத்கார புகார் கூறப்பட்டது.

இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது சுனிலின் தோழி என்று பூனம் பெயர் அடிபட்டது. சுனிலுக்கு உடந்தையாக இருந்தார் என குற்றவாளிகள் பட்டியலில் பூனம் பாண்டேவின் பெயரையும் போலீசார் சேர்த்திருக்கின்றனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் பூனம். கவர்ச்சி இமேஜ் வட்டத்தில் சிக்கி இருக்கும் பூனம் பற்றி பக்கம்பக்கமாக மும்பை பத்திரிகைகளில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.இதைக்கண்டு பயந்துபோன பூனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கதறல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நண்பர்களே… நான் ஒரு பெண். உங்களுக்கும் சகோதரிகள், அம்மா இருக்கிறார்கள்.

அதுபோல் என்னையும் எண்ணிக்கொள்ளுங்கள். போலீஸ் புகார் தொடர்பாக என்னைப்பற்றி பரபரப்பாக பெரிய அளவில் செய்தி வெளியிடுவது என்னையும், எனது குடும்பத்தையும் பாதிக்கிறது. எனவே தயவு செய்து இதை கருத்தில் கொண்டு அதுபோன்ற செய்திகளை தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன். விசாரணையில் என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை அனுபவிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

 

SHARE