மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத் தெரிவு செய்ய கத்தோலிக்கர்களுக்கு நேர்ந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

575
yazidi_minority_002

ஈராக்கில் கத்தோலிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு இலங்கைப் பேராயர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் ஈராக்கிய கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தாக்குதல்களை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈராக்கில் சிறுபான்மை கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

புனித பழைய பைபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிவே நகரமான மொசுல் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்படுகின்றனர்.

மதம் மாறுதல், தப்பிச் செல்லல் அல்லது மரணித்தல் ஆகிய ஏதாவது ஓர் வழியைத் தெரிவு செய்ய கத்தோலிக்கர்களுக்கு நேர்ந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

குறித்த தீவிரவாதிகள் மனித குலத்திற்கு விரோதமான வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த பயங்கரமான சம்பவங்களை பார்த்து உதாசீனப் போக்கைப் பின்பற்ற முடியாது என கத்தோலிக்க பேராயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“யாஸிடி” இன மக்களை கொத்து கொத்தாக கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

ஈராக்கில் உள்ள யாஸிடி என்னும் சிறுபான்மை இன மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்று குவித்து வருகின்றனர்.கடந்த யூன் 9ம் திகதி ஈராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் மொசூல் நகரையும், சிரியாவில் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து தனி இஸ்லாமிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.இந்த இஸ்லாமிய நாட்டிற்கு தன்னை தானே தலைவர் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை நிறுவிய அபூபெக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார்.

இதன்பின் கிறிஸ்துவர்களை வெளியேற்றும் வகையில் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் அல்லது ‘ஜிஷியா’ வரி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதால், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளனர்.

தற்போது ஈராக்கில் வெறும் 1 லட்சம் பேரை கொண்ட மிக சிறுபான்மையினரான “யாஸிடி” இனத்தவரை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொத்து கொத்தாக கொலை செய்து வருகின்றனர்.

ஜொராஷ்டிரிய மதத்தை பின்பற்றும் இவர்கள் ‘பேய்களை வழிபடுபவர்கள்’ எனக் கூறி வேட்டையாடி வருகின்றனர். மேலும் இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலானோர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், அடிமைகளாக ஆக்கப்பட்டது மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகள், ஆதரவற்று விடப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளிடமிருந்து தப்பிக்க மலைகளில் தஞ்சமடைந்த சில மக்கள் உணவு, நீர் ஏதும் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 40 பேர் குழந்தைகள் ஆவார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் யாஸிடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், இதே நிலை நீடித்தால், சிறிது நாட்களில் எங்களது இனமே அழிந்துவிடும் எனக் கூறி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் யின் இச்செயலிற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில்…கறுப்பின வார்த்தைகளை தூவிய ஒபாமா!

TPN NEWS

 

SHARE