இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

406

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் உங்களை பாதிக்கவில்லையா என்ற கேள்விக்கு ‘இல்லை நான் தார்மீக அதிகாரத்துடன் தான் பேசுகிறேன் என்பது குறித்து நான் உயாந்தபட்ச நம்பிக்கை கொண்டிருந்தேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இவ்வாறான கருத்துக்கள் என்னை பாதிப்பதில்லை, நாங்கள் அவர்களுக்கு உதவுவதால் எங்களது அலுவலகத்தின் பணிகளை பாராட்டும் 190 வேறு நாடுகள் உள்ளன, முக்கியமான சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதன் அவசியம் அந்த நாடுகளுக்கு தெரியும் அதனால் எங்களது பணிகளை தொடர்கிறோம’; என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை விடயங்களில் உலக நாடுகள் எதிர்பார்க்கும் தராதரத்திலிருந்து அமெரிக்க விலகிச்செல்கிறது என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்

SHARE